For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுவானில் வாஷிங் மெஷின் போல் குலுங்கிய விமானம்.. பீதியில் உறைந்த பயணிகள்! - வீடியோ

நடுவானில் வாஷிங்மெஷின் போல் விமானம் குலுங்கியதால் பயணிகள் பீதியடைந்தனர்.

Google Oneindia Tamil News

பெர்த்: நடுவானில் வாஷிங்மெஷின் போல் விமானம் குலுங்கியதால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர். கிட்டதட்ட 90 நிமிடங்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டிருந்ததாக அதில் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

உலகளவில் இதுவரை ஏராளமான விமான விபத்துகள் நிகந்துள்ளன. இதில் நூற்றுக்கணக்கானோர் இதுவரை மாண்டுள்ளனர்.

பல விமான விபத்துகள் மர்மமாகவே உள்ளன. விமாத்தின் பாகங்கள் அதில் பயணித்தவர்கள் குறித்த தகவல் ஏதும் கிடைக்கமால் பல விமானங்கள் விபத்தில் சிக்கியதாகவும், அதில் பயணித்தவர்கள் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெர்த் டூ கோலாம்பூர்

பெர்த் டூ கோலாம்பூர்

ஆனாலும் விமானத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர்-ஆசியா விமானம் புறப்பட்டது.

எந்திரத்தில் திடீர் கோளாறு

எந்திரத்தில் திடீர் கோளாறு

நூற்றுக்கணக்கான பயணிகள் அதில் இருந்தனர். விமானம் கடல் மேற்பரப்பில் பறந்து சென்று கொண்டிருக்கும் போது அதன் இடது பக்க இறக்கை மற்றும் எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.

வாஷிங்மெஷின் போல குலுங்கியது

வாஷிங்மெஷின் போல குலுங்கியது

இதனால் அந்த விமானம் வாஷிங் மெஷினை போல குலுங்கத் தொடங்கியது. கிட்டதட்ட 90 நிமிடங்கள் அந்த விமானம் குலுங்கிக்கொண்டே இருந்தது.

பீதியில் அலறிய பயணிகள்

பீதியில் அலறிய பயணிகள்

இதனால் என்னாகுமே எப்போது விமானம் கீழே விழுமோ அல்லது வெடித்து சிதறுமோ என அச்சத்தில் பயணிகள் கதறினர். பலர் தங்களின் அம்மாவையும் கடவுள்களையும் அழைத்தனர்.

பிரார்த்தனை செய்யுங்கள்

பிரார்த்தனை செய்யுங்கள்

ஆனால் கேப்டனோ பயப்படாதீர்கள் உங்களை பத்திரமாக கொண்டு செல்கிறேன். நீங்கள் அனைவரும் நாம் நல்லபடியாக தரையிறங்க வேண்டும் என கடவுளை பிரார்த்தனை செய்யுங்கள் என்றார்.

பத்திரமாக தரையிறக்கம்

பத்திரமாக தரையிறக்கம்

இதைத்தொடர்ந்து பயணிகள் அழுதபடியே பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து விமானி புறப்பட்ட பெர்த் விமான நிலையத்திற்கே விமானத்தை மீண்டும் கொண்டு சென்று தரையிறக்கினார்.

வைரலாகும் வீடியோ

விமானம் குலுங்குவதையும் அதில் பலர் கதறுவதையும் பலர் தன்னம்பிக்கையுடன் பேசுவதையும் தனது செல்போனில் படம் பிடித்த பயணி ஒருவர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமானிக்கு கண்ணீர்மல்க நன்றி

விமானிக்கு கண்ணீர்மல்க நன்றி

இருப்பினும் இதில் பயணிகள் யாருக்கும் காயமோ அல்லது விமானத்துக்கு எந்த சேதமோ ஏற்படவில்லை. தங்களை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு பயணிகள் கண்ணீர் மல்க கையை குலுக்கி நன்றி தெரிவித்தனர்.

English summary
AirAsia X flight was on its way from Perth to Kuala Lumpur. A blade had sheared off an engine, the captain told passengers.The plane shook for 90 minutes, passengers were crying, praying
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X