இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து அரசு.. இப்படியொரு அறிவிப்பை யாருமே எதிர்பார்க்கல
ஆக்லாந்து: அமெரிக்கா உட்பட சில நாடுகள் தங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. ஆனால், நியூசிலாந்து அரசு மட்டும் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. அப்படி என்ன செய்தி அது.. இது யாருக்கெல்லாம் பலன் தரும். இந்த சலுகையைப் பெற இந்தியர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் ஆட்சியில் அங்கு விசா நடைமுறைகள் தொடர்ந்து கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் விசா பெற முடியாமல் பலரும் சிரமப்படுகிறார்கள். ஏற்கனவே அமெரிக்கா சென்றுவிட்டவர்களும் கூட சிறு விதிமீறல்களுக்காக நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இன்ப அதிர்ச்சி கொடுத்த நியூசிலாந்து
இது அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பெரும் தலைவலியைத் தருவதாகவே இருக்கிறது. அதேநேரம் மறுபுறம் நியூசிலாந்து அரசு அங்கு வசிக்கும் இந்தியர்கள் உட்பட வெளிநாட்டவருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
என்ன தான் வெளிநாடு சென்றாலும் பெற்றோர்களைத் தனியாக விட்டுச் செல்வது பிள்ளைகளுக்குக் கவலையையே ஏற்படுத்தும். வெளிநாடு செல்லும் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சிக்கலாக இது இருக்கிறது. இதற்காகவே நியூசிலாந்து அரசு "பெற்றோர் பூஸ்ட் விசா" (Parent Boost Visa) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் பெற்றோர் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் 10 ஆண்டுகள் வரை நியூசிலாந்தில் வசிக்க முடியும்.
எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்
இந்த விசா திட்டத்திற்கு வரும் செப்டம்பர் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம். இது நிரந்தர குடியுரிமைக்கான வழி அல்ல. அதேநேரம் இந்த விசிட்டர் விசா பெற்றால்.. பல முறை எந்தவொரு சிக்கலும் இல்லாமல் நியூசிலாந்து சென்று வரலாம். தகுதி வாய்ந்தவர்கள் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை நியூசிலாந்தில் தங்கலாம்.
முதலில் ஐந்து வருடங்களுக்கு விசா வழங்கப்படும். அனைத்து விதிமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால், இரண்டாவது முறையாக விண்ணப்பித்து மேலும் ஐந்து வருடங்களுக்கு நீட்டிக்க முடியும். அதேநேரம் இந்த விசிட்டர் விசா நிரந்தர குடியுரிமை உரிமையை வழங்காது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. விசா காலம் முடிவதற்குள் அவர்கள் நியூசிலாந்தை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவர்கள் நாடு கடத்தப்படலாம்.
யாருக்கு உதவும்
நியூசிலாந்தில் கணிசமான இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் அந்நாட்டின் குடிமக்களாகவும், நிரந்தர குடியிருப்பாளர்களாகவும் உள்ளனர். அப்படி நியூசிலாந்தில் உள்ள இந்தியர்களின் பெற்றோர்கள் இதுவரை குறுகிய கால விசாக்களில் மட்டுமே தங்கள் பிள்ளைகளுடன் இருக்க முடிந்தது. இந்த புதிய விசா இந்தியப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் நீண்ட காலம் தங்குவதற்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அடிக்கடி விசா புதுப்பிக்கும் தொந்தரவும் இருக்காது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
நியூசிலாந்து குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்களின் இந்தியப் பெற்றோர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களது பெற்றோர்களும் இந்த விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவிலிருந்து விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு உடல்நலம் மற்றும் குற்றப் பின்னணி சோதனை நடத்தப்படும். முதல் விசா விண்ணப்பத்தின்போதும், மூன்றாவது வருடத்திலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். மூன்றாவது வருடத்திற்கான மருத்துவ பரிசோதனையை நிச்சயம் நியூசிலாந்துக்கு வெளியேதான் செய்து வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலம் தேவையில்லை
இதில் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம் இருக்கிறது. அதாவது வழக்கமாக மற்ற விசாக்களை பெறும்போது, அடிப்படை ஆங்கில அறிவு கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விசா விதிமுறையாகவே இருக்கும். ஆனால், இந்த விசா பெற ஆங்கில மொழித் திறன் தேவையில்லை. இது ஆங்கிலம் பேசத் தெரியாத வயதான பெற்றோருக்கு வசதியாக இருக்கும்.
நிபந்தனைகள்
அதேநேரம் இதற்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. முதலில் பெற்றோரைப் பார்த்துக் கொள்ளத் தேவையான வருவாய் இருக்கிறது என்பதற்கான ஆதாரத்தை நியூசிலாந்தில் இருக்கும் இந்தியக் குடும்பங்கள் (விசா கோரும் பெற்றோரின் பிள்ளைகள்) காட்ட வேண்டும். அல்லது இங்கிருந்து செல்லும் பெற்றோர்கள் தங்களுக்கு நிதி ஆதாரம் இருக்கிறது என்பதை காட்ட வேண்டும். விசா வைத்திருக்கும் காலம் முழுவதும் மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும். அது அவசர மருத்துவச் செலவுகள், புற்றுநோய் சிகிச்சை மற்றும் தாயகம் திரும்புவதற்கான செலவுகள் ஆகியவற்றை கவர் செய்ய வேண்டும்.
இந்த பெற்றோர் பூஸ்டர் விசாவில் வருவோர் நியூசிலாந்தில் வேலை செய்ய முடியாது. ஆனால், வருடத்திற்கு மூன்று மாதங்கள் வரை படிக்கலாம்.. அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ரிமோட் முறையில் வேலை செய்யலாம். அதேநேரம் இதன் மூலம் அதிக வருவாய் கிடைத்தால் நியூசிலாந்தில் வரி செலுத்த வேண்டும்.
-
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications