இஸ்ரேலை நோக்கி அணிவகுத்த ராக்கெட்டுகள்.. ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்.. எகிறும் டென்ஷன்
டெல் அவிவ்: இஸ்ரேலில் உள்ள ராணுவ தளங்களை நோக்கி லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். அன்று ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 250 பேரை பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதைத் தொடர்ந்து கடும் கோபம் அடைந்த இஸ்ரேல், ஹமாஸ் மீது ராணுவ தாக்குதலை முன்னெடுத்தது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சபதம் விடுத்துள்ளார். இரு தரப்பினருக்கும் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக இந்த சண்டை நீடித்து வருகிறது.
இஸ்ரேல் - ஹமாஸ்: இதனால் லட்சக்கணக்கானோர் தங்களது குடியிருப்பை விட்டு வெளியேறி அண்டை நாடுகளான எகிப்து, லெபனான் எல்லையில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி வருகின்றனர். ஆனால் அகதிகள் முகாமை குறிவைத்தும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின.
இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனாலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே, சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சில ஈரான் தளபதிகள் கொல்லப்பட்டனர்.
ஏவுகணை தாக்குதல்: இதனால் கொந்தளித்த ஈரான், இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இருப்பினும், இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இந்த தாக்குதலை முறியடித்துவிட்டது. இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் வெடிக்கும் அளவுக்கு பதற்றம் ஏற்பட்டு தற்போது சற்று இந்த மோதல் தணிந்துள்ளது.
ராக்கெட் தாக்குதல்: இதனிடையே, நேற்று இரவு இஸ்ரேல் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து லெபனானில் உள்ல ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கத்யுஷா வகை ராக்கெட்டுகளை ஏவி அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளது. லெபானில் உள்ள ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது.
லெபானின் தெற்கு பகுதியில் உள்ள கிரமங்களை குறிவைத்து இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகத்தான் 12 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ராக்கெட் தாக்குதலை இஸ்ரேலும் உறுதி செய்துள்ளது.
இஸ்ரேலும் பதிலடி: இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், லெபனானில் இருந்து எயின் ஸெடிம் பகுதியை நோக்கி 35 க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. ராக்கெட் ஏவியதற்கு பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications