சுரங்கத்துக்குள் பதுங்கிய ஈரான் தலைவர் கமேனி.. தாக்குதலுக்கு தயாரான அமெரிக்கா? பெரும் பதற்றம்
டெஹ்ரான்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது. ஈரானை நோக்கி அமெரிக்கா போர்க்கப்பல்கள், போர் விமானங்களை நிலை நிறுத்தி உள்ளது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் நிலவி வருகிறது. இதனால் பாதுகாப்பு கருதி ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்போ போராட்டத்தை அரசு முடக்ககூடாது. போராட்டக்காரர்களை தூக்கில் போடக்கூடாது. மீறினால் அமெரிக்கா தலையீடு செய்யும். ஈரானை தாக்கவும் தயங்கமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும் அமெரிக்கா, எப்போது வேண்டுமானாலும் ஈரானை தாக்கலாம் என்ற நிலை உள்ளது. இதற்கு ஏற்ப அமெரிக்கா தனது போர்க்கப்பல்கள் மற்றுமு் போர் விமானங்களை ஈரானை சுற்றிய இடங்களில் நிலை நிறுத்தி உள்ளது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ராணுவ, விமானப்படை தளங்களில் வான்வெளி பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கான அமைப்புகளை அமெரிக்கா பலப்படுத்தி உள்ளது.
இதனால் ஈரான் நடுங்கி உள்ளது. அதேவேளையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் தெரிவித்து உஷாராகி உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்கா தாக்கினால் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை குறிவைத்து தாக்கலாம் என்று அந்த நாட்டின் உளவுத்துறை கணித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி உள்ளார்.
அயதுல்லா அலி கமேனி தற்போது பதுங்கி உள்ள சுரங்கம் ஈரானில் பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பான சுரங்கங்கங்களில் மிகவும் முக்கியமானது. இந்த சுரங்கம் எத்தகைய தாக்குதலையும் தாங்கும் திறனும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேற பூமிக்கடியில் பல வழிப்பாதைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
அயதுல்லா அலி கமேனி தற்போது பதுங்கி உள்ள சுரங்கம் ஈரானில் பூமிக்கடியில் உள்ள பாதுகாப்பான சுரங்கங்கங்களில் மிகவும் முக்கியமானது. இந்த சுரங்கம் எத்தகைய தாக்குதலையும் தாங்கும் திறனும் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுரங்கத்தில் இருந்து அடுத்தடுத்து வெளியேற பூமிக்கடியில் பல வழிப்பாதைகளும் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் தற்போது அயதுல்லா அலி கமேனியின் அலுவலகத்தில் அவரது 3வது மகன் மசூத் அமர்ந்து முக்கிய நிர்வாக முடிவுகளை எடுத்து வருகிறார். ஈரான் அதிகாரிகள் மசூத்தை தான் தொடர்பு கொண்டு முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இஸ்ரேல் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் எதிர்க்கட்சி ஆதரவு சேனலில் வெளியான செய்தியை மையப்படுத்தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு பயந்து ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதாக இஸ்ரேலும், அமெரிக்காவும் குற்றம்சாட்டியது. இஸ்ரேல் ஈரானை தாக்கிய பிறகு அந்த நாட்டுக்கு ஆதரவாக அமெரிக்காவின் போர் விமானங்கள் ஈரானில் உள்ள 3 அணுசக்தி நிலையங்கள் மீது குண்டு வீசி சென்றது. இந்த சமயத்தில் ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?













Click it and Unblock the Notifications