Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணு ஆயுத பயிற்சியில் ரஷ்யா.. அமெரிக்காவால் புதின் அதிரடி உத்தரவு.. பெரும் பதற்றத்தில் உக்ரைன் போர்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைன் மீதான போருக்கு இடையே ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அணுஆயுத பயிற்சிக்கு உத்தரவிட்டுள்ளார். உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறி இந்த உத்தரவை புதின் பிறப்பித்துள்ளார். இதனால் உக்ரைன் உள்பட உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன. அதோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே இருந்த மோதல் என்பது தற்போது போராக மாறி உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 3வது ஆண்டை நெருங்கி வருகிறது.

russia ukraine vladimir puthin

எல்லை பிரச்சனைக்கு நடுவே ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா போரை தொடங்கியது. தற்போது உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த போர் நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் ரஷ்யா படைகளை உக்ரைன் சமாளித்து வருகிறது. போரை கைவிட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்யாவுக்கு நம் நாடு உள்பட பல நாடுகள் கூறி வருகின்றன. ஆனால் புதின் போரை கைவிடாமல் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் தான் தற்போது நிலைமை எல்லை மீறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது. இது விளாடிமிர் புதினுக்கு பிடிக்கவில்லை. இதற்கிடையே தான் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைன் மூலம் ரஷ்யாவுக்குள் அணுஆயுதம் சார்ந்த ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இது அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ரஷ்யா கருதுகிறது.

தொடக்கம் முதலே அமெரிக்கா உக்ரைனுக்கு உதவினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புதின் எச்சரிக்கை செய்து வருகிறார். அதோடு அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டது. இதற்கு ரஷ்யா தரப்பில் அவ்வப்போது அணு ஆயுதத்தை மையப்படுத்தி விடுவிக்கப்பட்ட மிரட்டலும் முக்கிய காரணமாகும். இத்தகைய சூழலில் தான் தற்போது பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்ய படைகளுக்கு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி ரஷ்யாவில் அணுஆயுத பயிற்சிகளை தொடங்க அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக புதின், ‛‛புவிசார் அரசியலில் பதற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவுக்கு வெளிப்புறத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனை சமாளிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். அதோடு தேவையான அனைத்து பயிற்சிகளையும் தொடங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் அணுஆயுத பயிற்சியும் அடங்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

புதினின் இந்த உத்தரவை தொடர்ந்து ரஷ்யா பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தேரி பெலோசோவ், ‛‛எதிரிகள் அணுசக்தி தாக்குதலை முன்னெடுக்கலாம். இதற்கு பதிலடி கொடுக்கவும், நாட்டை பாதுகாக்கவும் அணுஆயுத பயிற்சியை நாங்களும் முன்னெடுக்கிறோம். இந்த பயிற்சி என்பது தரை, கடல் மற்றும் வான்வழி ஏவுகணைக தாக்குதல்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட உள்ளது’’ என்றார்.

இதற்கிடையே தான் ரஷ்யாவில் தற்போது பல்வேறு பயிற்சிகள் தொடங்கி உள்ளன. அதாவது பிளெசெட்ஸ்க் காஸ்மோரோம் என்ற இடத்தில் யார்ஸ் எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காஸ்மோட்ரோமில் இருந்து கம்சட்கா வரை இந்த ஏவுகணை ஏவி சோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சினேவா மற்றும் புலவா பாலிஸ்டிக் ஏவுகணைகளை நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் cruise வகை ஏவுகணைகள் என்பது விமானங்களில் இருந்து வீசப்பட்டு பயிற்சி செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இதன் தொடர்ச்சியாக விரைவில் ரஷ்யா அணுஆயுத பயிற்சியை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கூட உக்ரைன் மீதான போரை அணுஆயுதங்கள் பயன்படுத்தாமல் ரஷ்யா வெல்லும் என்று சமீபத்தில் விளாடிமிர் புதின் கூறியிருந்தார். அதாவது உக்ரைனில் வெற்றிபெற ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தத் தேவையில்லை என்று புதின் தெரிவித்து இருந்தார். அதேவேளையில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு என்பது உள்ளதால் புதினும் அணுஆயுத பயிற்சியை தொடங்கலாம் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள்.

இந்த உலகத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள அணுஆயுதத்தில் ரஷ்யா மற்றும் அமெரிக்காவில் மட்டும் 88 சதவீதம் உள்ளது. இதனால் ஒருவேளை ரஷ்யா அணுஆயுதத்தை கையில் எடுத்தால் அமெரிக்கா சும்மா வேடிக்கை பார்க்காது. உடனடியாக உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பதிலடி தாக்குதலை உடனடியாக தொடங்கும். இதனால் உக்ரைன் மீதான ரஷ்யா போர் என்பது தற்போது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+