For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓரின சேர்க்கையை எதிர்க்கும் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா லெஸ்பியனா?.. வீடியோவால் சர்ச்சை

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெர்லின்: ஓரினச் சேர்க்கை திருமண ஆதரவு சட்டத்தை எதிர்க்கும் ஜெர்மனி அதிபர், ஏஞ்சலா மெர்க்கல் லெஸ்பியன் உறவில் ஈடுபடுவது போன்ற வீடியோ அந்த நாட்டில் வெளியிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் ஏஞ்சலா மெர்க்கல். இவர் ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு தனது ஆதரவு இல்லை என்று கூறியதால், லெஸ்பியன் மற்றும் கோஷ்டியினர் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால், அதிபர் என்றும் பாராமல், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பரவ விட்டுள்ளனர்.

'Angela Merkel' stars in lesbian advert for new German magazine for gay women?

அந்த வீடியோவின் காட்சி கதவு இடுக்கில் இருந்து எடுக்கப்பட்டதை போல விரிகிறது. உள்ளே, ஏஞ்சலா போன்ற அச்சு அசல் தோற்றம் கொண்ட பெண்மணி நிற்கிறார். அப்போது ரேடியோவில் செய்தி வாசிக்கும் ஒலி வெளியாகிறது. அந்த செய்தியில், ஜெர்மனி மக்களில் 62 சதவீதம்பேர், ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அப்போது, பின்புறமாக இருந்து ஒரு இளம் பெண் வந்து, ஏஞ்சலா போல உள்ள பெண்ணை கட்டிப்பிடிக்கிறார். பதிலுக்கு இவரும் ஒத்துழைக்கிறார். இவ்வாறு அந்த விளம்பர படம் உள்ளது. ஏஞ்சலாவை போன்ற தோற்ற அமைப்பு கொண்ட பெண் அக்காட்சியில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் ஜெர்மனியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A video featuring a lookalike of German Chancellor Angela Merkel in a lesbian relationship has been released in an apparent bid to mock her anti-gay marriage stance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X