கொடுமை.! கனடா பள்ளிகள் முழுக்க சிறார்கள் கல்லறை.. 3 வயது குழந்தைகளையும் விடவில்லை.. யார் காரணம்
ஒட்டவா: கனடா நாட்டில் பிரிட்டிஷ் காலத்துப் பள்ளிகளில் மறைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், பிரிட்டன் மகாராணிகளின் சிலைகளைக் கனடா மக்கள் தகர்த்து வருகின்றனர்.
17ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் காலத்தில் பிரிட்டிஷ் மற்ற நாடுகளை அடிமைப்படுத்தத் தொடங்கியது. அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா, வரை பல நாடுகளும் பிரிட்டிஷ் பேரரசுக்குக் கீழ் தான் இருந்தது.
பிரிட்டன் ஆட்சி சமயத்தில் நடைபெற்ற கொடூரங்கள் எல்லாம் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அதுபோல பிரிட்டன் ஆட்சியில் நடந்து ஒரு கொடூரம் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கனடா
18ஆம் நூற்றாண்டில் இருந்து 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை கனடாவைப் பிரிட்டன் தான் ஆட்சி செய்து வந்தது. அந்தச் சமயத்தில் கனடா நாட்டில் வசித்த பூர்வக்குடி மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியில் கனடா பூர்வக்குடி மக்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டனர். அந்த காலகட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்துவ அமைப்புகளால் உண்டு உறைவிட பள்ளிகள் நடத்தப்பட்டது.

பூர்வக்குடி மக்கள்
அந்த பள்ளிகளில் பூர்வக்குடி மக்களின் குழந்தைகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டனர். பூர்வக்குடி மக்களின் தாய்மொழியைப் பேசக் கூட அந்தப் பள்ளிகளில் தடை விதிக்கப்பட்டது. பூர்வக்குடியினரின் கலாச்சார நடைமுறைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஐரோப்பிய கலாசாரம் திணிக்கப்பட்டது. இப்படி கொடூரங்கள் நடைபெற்ற போதிலும், இதுபோன்ற பள்ளிகளுக்குத் தேவையான நிதியைப் பிரிட்டன் அரசு ஒதுக்கவில்லை.

மோசமான சூழல்
இதனால் குழந்தைகள் மோசமான சுகாதார நிலையில் இருக்க வேண்டிய நிலை இருந்தது. நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைந்ததால் விலங்குகள் வளர்ப்பு, ஆடைகள் தயாரிப்பு போன்ற வருமானம் ஈட்டும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆபத்தான சூழலில் குழந்தைகள் பணியாற்ற வேண்டி இருந்ததால், அவர்கள் உயிரிழக்கும் நிலையும்கூட ஏற்பட்டது. அப்படி உயிரிழப்பவர்களை அந்தப் பள்ளிகளிலேயே சத்தமில்லாமல் புதைத்துவிடுவார்கள்.

மூன்று வயதுக் குழந்தைகள்
அப்படிப் புதைக்கப்பட்ட கல்லறைகள் தான் தற்போது அங்குத் தொடர்ந்து கண்டுபிடிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பிரிட்டிஷ் கொல்ம்பிய மாகாணத்தில் உள்ள ஒரே பள்ளியில் 215 குழந்தைகளின் கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சில மூன்று வயதுக் குழந்தைகளின் கல்லறைகளும் அடக்கம்.

பிரிட்டிஷ் பேரரசு
இது பிரிட்டன் பேரரசு மீதான மக்கள் கோபத்தை அதிகரித்துள்ளது. அங்குள்ள பிரிட்டன் மகாராணிகளின் சிலைகள் தகர்க்கப்பட்டு வருகிறது. அப்படி கனடா நாட்டில் அமைந்துள்ள விக்டோரிய மகாராணி மற்றும் இரண்டாம் எலிசெபத்தின் சிலைகள் தகர்க்கப்பட்டுள்ளன. கனடா 1867ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோதிலும், பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அந்நாட்டின் ராணியாகத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications