இந்து என்பதாலேயே இப்படியா? துடிதுடிக்க இறந்த 23 வயது இளைஞர்.. வங்கதேசத்தில் அரங்கேறிய கொடூரம்
டாக்கா: வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை நடந்து வருகிறது. அடுத்தடுத்து இந்துக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது கேரேஜில் 23 வயது இளைஞர் உயிருடன் தீவைத்து கொல்லப்பட்டுள்ளார். அவரது கேரேஜுக்குள் நுழைந்த கும்பல் அவரை அடித்து உதைத்து உள்ளே வைத்து பூட்டியது. பிறகு கேரேஜை சுற்றி பெட்ரோல் ஊற்றி தீவைத்து சென்றது. இந்த புகையில் மூச்சுத்திணறி இறுதியில் தீயில் கருகி அந்த இளைஞர் பலியானது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வங்கதேசத்தில் தொடர்ந்து வன்முறைகள் தொடர்ந்து நடந்து வந்தது. இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். தீவைத்தும், அடித்தும் கொல்லப்பட்டனர். இதனை தடுக்க மத்திய அரசு கோரிக்கை வைத்தும் கூட வங்கதேச இடைக்கால அரசு கண்டுக்கொள்ளவில்லை. இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய தூதரகம் மூடப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் நாடு திரும்பி உள்ளனர். தற்போது அங்கு வன்முறை இல்லை. இருப்பினும் பதற்றம் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. பிப்ரவரி 12ம் தேதி அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இப்படியான சூழலில் தான் தற்போது இந்து மதத்தை சேர்ந்த 23 வயது நபரான சன்சால் சந்திரா பூமிக் உயிருடன் எரித்து கொல்லப்பட்டுள்ளார். இவர் சுமிலா மாவட்டம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர். ஆனால் அவர் நார்சிங்டி மாவட்டத்தில் மசூதி மார்க்கெட் அருகே தங்கி கேரேஜில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு சன்சால் சந்திரா பூமிக் கேரேஜில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அவரை தாக்கினர். பிறகு அவரை கேரேஜ் உள்ளேயே போட்டுவிட்டு வெளியேறினர். பிறகு வெளியில் இருந்து ஷட்டரை சாத்திவிட்டு கேரேஜை சுற்றி பெட்ரோல் ஊற்றி வெளியே இருந்து தீவைத்தனர்.
அப்போது வெளியில் பற்றி எரிந்த தீயின் புகை கொஞ்சம் கொஞ்சமாக கேரேஜுக்குள் சென்றது. அதன்பிறகு தீயும் கேரேஜுக்குள் பரவியது. இதுபற்றி அங்குள்ள மக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் புகை குறையவில்லை. இதனால் மீட்பு பணி சவாலாக இருந்தது. இறுதியாக தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சன்சால் சந்திரா பூமிக் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே தான் கேரேஜ் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்கும் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி சன்சாலின் குடும்பத்தினர் கூறுகையில், ‛‛திட்டமிட்ட கொலை இதுவாகும். நன்கு திட்டமிட்டு சன்சாலை உயிரோடு எரித்து கொன்றுள்ளனர். கொன்ற நபர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும்'' என்று கதறினர்.
போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் வங்கதேசத்தில் மைனாரிட்டியாக இருக்கும் இந்துக்கள் மீண்டும் அச்சமடைய தொடங்கி உள்ளனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications