For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அப்போ மலேசியன் ஏர்லைன்ஸ்... அடுத்து ஏர் ஏசியா – விமான விபத்துகளில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்கள்

Google Oneindia Tamil News

மணிலா: இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டு 162 பேரின் உயிரினை நடுவானிலேயே பலிவாங்கிய ஏர் ஏசியா விமானச் சேவை நிறுவனத்தின் மற்ற விமானங்கள் சிலவும் ஆபத்தினைக் கடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானத்தின் ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்டில் ஒழுங்கற்ற நிலை இருந்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஆனால், எந்த தொழில்நுட்ப கோளாறுகளும் ஏற்படவில்லை என்று பொறியாளர்கள் உறுதி செய்தபின்னரே அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.

Another AirAsia plane overshoots runway on landing in Philippines…

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு ஏர் ஏசியா விமானமும் விபத்துக்குள்ளாகி, பயணிகளை அதிர்ச்சியடைய செய்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிறுவனத்தின் ஆர்பி-சி 8972 என்ற பயணிகள் விமானம், 159 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் பிலிப்பைன்சின் மணிலா நகரத்தில் இருந்து பானே தீவில் உள்ள கலிபோவுக்கு புறப்பட்டது.

கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ரன்வேயில் விமானத்தை தரையிறக்கும்போது, விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியது. இதனால் ரன்வேயைத் தாண்டி புல்வெளியில் பாய்ந்தது.

உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். ஆனால், விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதில், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
An AirAsia plane has overshot the runway on landing in the Philippines, forcing passengers to evacuate the aircraft on emergency slides, it has been reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X