Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமியின் கதை முடிஞ்சது! திரும்ப போகவே முடியாது! அண்டார்டிகாவில் ஆபத்து.. ஆய்வாளர்கள் ஷாக்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அண்டார்டிகா பகுதியில் பனி உருகி வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கு ஒரு லிமிட் இருக்கிறது. அதை தாண்டினால், மீண்டும் என்ன செய்தாலும் பனி பழை நிலைமைக்கு வராது. அப்படி மட்டும் நடந்தால் பூமியை காப்பாற்றவே முடியாது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மட்டுமல்லாது இந்த லிமிட்டுக்கு மிக நெருக்கமாக நாம் வந்துவிட்டோம் என்றும் அவர்கள் வார்னில் கொடுத்திருக்கிறார்கள்.

பனி உருகுவது தொடர்பாக நார்வே நாட்டின் 'NORCE' எனும் ஆராய்ச்சி அமைப்பு, பிரிட்டனின் 'நார்தம்ப்ரியா' பல்கலைக்கழகம் மற்றும் ஜெர்மனியின் 'போட்ஸ்டாம்' பல்கலைக்கழகம் இது தொடர்பாக தொடர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இந்த ஆய்வில்தான் உலகம் ஆபத்தில் இருக்கும் விஷயம் தெரிய வந்திருக்கிறது.

Climate change earth
Photo Credit:

பூமி வெப்பமடைகிறது. காரணம் கார்பன் வெளியேற்றம்தான். பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற புதைப்படிவ எரிபொருட்களை அதிக அளவு பயன்படுத்துவதால்தான் கார்பன் அதிக அளவில் வெளியேறுகிறது. மட்டுமல்லாது தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் புகையும் இதற்கு முக்கியமான காரணம்.

இதனால் பூமியின் வெப்பநிலை இயல்பான அளவிலிருந்து அதிகரித்திருக்கிறது. வெப்பம், துருவ பகுதியில் உள்ள பனி பாறைகளை உருக்கி வருகிறது. இப்படியே நடந்ததால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோர பகுதிகள் மூழ்கிவிடும்.

இதனை சரி செய்ய, வெப்பநிலையை கன்ட்ரோல் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மீண்டும் பூமி இயல்பான வெப்பநிலைக்கு திரும்பி, பனியும் மீண்டும் உருவாகும். ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பனி உருகுவதை ஓரளவுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும். இதற்கு ஒரு எல்லை கோடு இருக்கிறது. இதனை தாண்டிவிட்டால் நாம் எவ்வளவு முயன்றாலும் பனி மீண்டும் உருவாகாது. இப்போது நாம் இந்த எல்லைக்கு மிக மிக அருகில் இருக்கிறோம்.

எல்லையை தாண்டினால் பிரச்சனைதான். உதாரணத்திற்கு ஆய்வாளர்கள் ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்கள். அதாவது, அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறையில் ஒரு சிறிய பகுதி உருகுகிறது எனில், அது உலகம் முழவதும் சுமார் 4 மீ உயரத்திற்கு கடல் மட்டத்தை அதிகரிக்கும். சென்னையில் இப்படி நடந்தால் மெரினா பீச் என்று ஒன்று இருக்காது. நீலாங்கரை, அடையாரும் கடலில் மூழகும். சென்னையின் வடிகால் அமைப்புகள் மூலமாக, ஊருக்குள் கடல்நீர் புகும். பள்ளிக்கரனை சதுப்பு நிலம் அழியும்.

இப்படியெல்லாம் நடக்காமல் இருக்க வேண்டும் எனில், உடனடியாக வெப்பநிலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். அதாவது கார்பன் வெளியேற்றத்தை குறைக்க வேண்டும். கார்பன் வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகள்..

சீனா - 30%
அமெரிக்கா - 14%
இந்தியா - 7%
ஐரோப்பிய யூனியன் - 6%
ரஷ்யா - 5%

இந்த நாடுகள் மட்டும் சுமார் 62% அளவுக்கு கார்பனை வெளியேற்றுகிறது. எனவே உடனடியாக இதை கட்டுப்படுத்த வேண்டும். அப்படித்தான் மனித குலத்தை காப்பாற்ற முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+