மோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை
டாக்கா: பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து சுடும் அளவுக்கு நிலவரம் போயுள்ளது.
டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்ட 50வது ஆண்டு விழா மற்றும் அதன் நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு ஆண்டு விழா தற்போது கொண்டாடப்படுகிறது.

மோடி முதல் வெளிநாட்டு பயணம்
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார், வங்கதேச பிரதமர் பிரதமர் ஷேக் ஹசீனா. இதையடுத்து மோடி இன்று வங்க தேசம் சென்றார். கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் எதையும் ஏற்கொள்ளவில்லை. பாதுகாப்பு கருதியும், லாக்டவுன் காரணமாகவும் பிரதமர் மோடி வெளிநாடுகள் எதற்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் கொரோனா பரவலுக்கு பின் பிரதமர் மோடி முதல் வெளிநாட்டு பயணத்தை இன்று மேற்கொண்டார்.

போராட்டங்கள்
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு வங்கதேசம். இந்த நிலையில் மோடி வருகைக்கு அங்குள்ள இஸ்லாமிய அமைப்பினர் பலர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

பிற நாட்டு தலைவர்கள்
வங்கதேசம் தங்களது சுதந்திர விழாவை 10 நாள் கொண்டாட்டமாக நடத்தி வருகிறது. இதையொட்டி, ஏற்கனவே இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலத்தீவின் தலைவர்கள் அங்கு நடந்த விழாவில் கலந்து கொண்டனர். ஆனால் மோடி வருகைக்கு அங்கேயுள்ள அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

அடக்குமுறை என குற்றச்சாட்டு
இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக மோடி அரசு அடக்குமுறைகள் நடத்துவதாக குற்றம்சாட்டி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட விவகாரங்களை முன் வைத்து போராட்டக்காரர்கள் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2,000 மாணவர்கள் பங்கேற்றனர். போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து கூட்டத்தை நோக்கி சுட்டனர். லத்தி சார்ஜ் நடந்துள்ளது. இதில் 40 போராட்டக்காரர்கள் காயமடைந்தனர், என்று போராட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர் உரிமைகள் பேரவையின் மூத்த அதிகாரி பின் யாமின் மொல்லா கூறியுள்ளார். ஆனால், இது நேற்றுவரை நடந்த போராட்டங்கள்தான். வெள்ளிக்கிழமை இதுவரை எந்த போராட்டமும் நடக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications