அரபு நாடுகள் மோதல் எதிரொலி... இந்திய விமான பயணிகளுக்கு பாதிப்பு!
சவுதி அரேபியா மற்றும் கத்தார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக, இந்தியாவில் இருந்து கத்தாருக்கு, விமான சேவை வழங்கும் நிறுவனங்கள், கட்டணத்தை உயர்த்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரியாத்: கத்தார் நாடு தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாகக் கூறி, அந்நாட்டுடனான தூதரக உறவை சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ளன. இதையடுத்து, கத்தார் நாட்டிற்கு நேரடி விமானச் சேவை மேற்கொள்ள முடியாத சிக்கல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது.
தோஹா விமான நிலையம் நோக்கிச் செல்லும் விமானங்கள், ஐக்கிய அரபு அமீரம் வான் எல்லையில் பறந்தால், விபரீதி விளைவுகள் ஏற்படும் என்றும் 5 அரபு நாடுகள் எச்சரித்துள்ளன.

இதனால், கத்தார் தலைநகர் தோஹாவுக்கு, விமான சேவை இயக்க வேண்டும் என்றால், பாரசீக வளைகுடா வழியாக, ஈரான், ஈராக் சென்று, அதன்பிறகே கத்தார் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, விமான நிறுவனங்கள், பயணக் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. இரட்டை செலவாகும் இந்த சேவையால், கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என, இந்திய விமான நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
தற்சமயம், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து, தோஹாவுக்கு, நேரடி விமான சேவை வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications