‛நண்பேண்டா’.. இந்தியா-ரஷ்யா உறவில் பிளவை ஏற்படுத்துவதா? கண்சிவந்த புதின்! பிரதமர் மோடிக்கு பாராட்டு
மாஸ்கோ: பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக வளர்ந்து வருகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்த மேற்குலக நாடுகள் முயற்சிப்பது என்பது அர்த்தமற்றது என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பரபரப்பாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் நட்பு நாடுகளில் முதன்மையானதாக ரஷ்யா உள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு படையில் ரஷ்யாவின் பங்கு என்பது முக்கியமானது. ரபேல் போர் விமானம் உள்பட பல போர் தளவாட பொருட்கள் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்து வருகிறது.

இதனால் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு என்பது நீண்டகாலமாக நன்றாக தொடர்ந்து வருகிறது. மேலும் சர்வதேச அளவில் பிரச்சனைகள் ஏற்படும்போதெல்லாம் ரஷ்யா, இந்தியாவின் பக்கம் இருந்து ஆதரவு தெரிவித்து வருகிறது.
இத்தகைய சூழலில் தான் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கியது. இன்னும் போர் நடந்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையை பல நாடுகள் கண்டித்துள்ளன. ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா எந்த பொருளாதார தடைகளையும் விதிக்கவில்லை. தொடர்ந்து ரஷ்யாவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. அதோடு நட்பு நாடு என்ற அடிப்படையில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் போரை நிறுத்திவிட்டு பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தெரிவித்து வருகிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. இதற்கிடையே தான் ரஷ்யா உடனான உறவை இந்தியா கைவிட வேண்டும் என சில மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் சூச்சியில் உள்ள ரஷ்யன் கருப்பு கடல் ரெசார்ட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பேசினார். அப்போது அவர் இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை மேற்கத்திய நாடுகள் முயற்சித்து வருவதாகவும், இதில் எந்த நியாயமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விளாடிமிர் புதின் கூறியதாவது:
‛‛மேற்கத்திய நாடுகள் தங்களின் கொள்கைகளை ஏற்காத ஒவ்வொருவரையும் எதிரியாக்க முயற்சிக்கிறது. இதில் அனைவருக்கும் ஆபத்து உள்ளது. இந்தியாவுக்கும் கூட ஆபத்து இருக்கிறது. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் மக்களின் நலன்கருதி சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான உறவில் பிளவை ஏற்படுத்தும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் என்பது அர்த்தமற்றதாக இருக்கிறது.
இதனால் இந்தியா என்பது ஒரு சக்திவாய்ந்த நாடு. வலிமை மிக்க நாடாக இந்தியா உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலுவான நாடாக வளர்ந்து வருகிறது. உலகின் அனைத்து பகுதிகளிலும் இந்தியர்கள் தங்களின் முத்திரைகளை பதித்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவை போல் இந்தியாவுக்கும் எல்லைகள் என்பது இல்லை.'' என்றார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications