திடீர் திருப்பம்.. கதறியபடி குழந்தையை வீரரிடம் கொடுத்த தாய்.. நடந்தது என்ன.. அமெரிக்க ராணுவம் தகவல்

ஊடகங்களில் பெண்கள் பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

காபூல்: தங்கர் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றும் நோக்கத்துடன், ஆப்கான் தாய்மார்கள் குழந்தைகளை அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.. இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டின் ஒவ்வொரு நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெற்று வருகிறது..

தாலிபன்களிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள காபூல் ஏர்போர்ட்டை முற்றுகையிட்டாலும், எதிர்பார்த்ததுபோல அனைவராலுமே அங்கிருந்து தப்பி செல்ல முடியவில்லை... மாறாக, பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.

 தாக்குதல்

தாக்குதல்


பெண்கள் உட்பட யாரையுமே பழிவாங்க மாட்டோம் என்று எப்போது தாலிபான்கள் சொன்னார்களோ அப்போதே, தாக்குதலை தொடங்கிவிட்டார்கள்... அது சம்பந்தமான வீடியோக்கள் பல வெளிவந்தாலும், இப்போதுவரை இந்த குற்றச்சாட்டுக்கு தலிபான்கள் எந்த விளக்கமும் தரவே இல்லை.

 7 மாத குழந்தை

7 மாத குழந்தை

பெண்களை சவுக்கால் அடித்து, ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகளுக்கும் விளக்கம் எதுவும் வரவில்லை.. காபூல் ஏர்போர்ட்டில் இருந்து கும்பல் கும்பலாக மக்கள் விமானத்தில் ஏற முயன்ற போட்டோ வெளியானது.. அதில், 7 மாத பெண் குழந்தை ஒன்று, தன் பெற்றோரை பிரிந்த நிலையில், ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் கண்ணீர் போட்டோ அனைவரையும் கண்கலங்க செய்துவிட்டது... இதற்கும் தாலிபான்கள் எந்த விளக்கத்தையும் தரவில்லை.

 தாலிபான்கள்

தாலிபான்கள்

ஏர்போர்ட்டில் தாலிபான்கள் தாக்க தொடங்கியதுமே, எப்படியாவது தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குழந்தைகளை ராணுவ வீரர்களிடம் தாய்மார்களே தூக்கி தூக்கி வீசினர்.. தாலிபான்கள் வர்றாங்க.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. என்று கதறி கொண்டே குழந்தைகளை வீசினார்கள்.. காபூல் ஏர்போட்டை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது..

 முள்வேலி

முள்வேலி

அந்த முள்வேலிக்கு வெளியே ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடலாம் என்ற நோக்கத்தில், முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசியுள்ளனர்.. இதில், சில குழந்தைகள் வேலியை தாண்டி ஏர்போர்ட்டிக்குள் விழுந்தது.. சில குழந்தைகள் முள்வேலிக்குள்ளேயே விழுந்து கதறி உள்ளது.. இப்படிப்பட்ட பயங்கரத்தை எங்களால் விவரிக்க முடியவில்லை என்று கண்ணீர்விட்டு கொண்டே படைவீரர்கள் சொன்ன வீடியோவும் வெளியானது.. அதற்கும் தாலிபான்கள் வாய் திறக்கவில்லை.. இப்போதும் 2 வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

 சிறுமி சடலம்

சிறுமி சடலம்

காபூல் ஏர்போர்ட்டில் ஒரு சிறுமி காத்திருந்தபோது உயிரிழந்துவிட்டார்.. பிறகு அந்த சிறுமியின் சடலத்தை அவளது பெற்றோரிடம் வீரர்கள் ஒப்படைத்துள்ளனர்.. அந்த உடலை பெற்ற தகப்பன், கட்டியணைத்தவாறு தூக்கிசெல்லும் வீடியோவை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. அதேபோல, இதே ஏர்போர்ட்டில் ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் காத்திருந்துள்ளார்..

 பாதுகாப்பு வீரர்

பாதுகாப்பு வீரர்

அப்போது குழந்தையை அமெரிக்க பாதுகாப்பு படை வீரரிடம் ஒப்படைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது... தன் உயிருக்கு நிச்சயம் பாதுகாப்பு இல்லை என்றாலும், குழந்தையின் எதிர்காலமாவது நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து, முகமே தெரியாத ஒரு படைவீரரை நம்பி குழந்தையை ஒப்படைக்கிறார் அந்த தாய்.. ஆப்கானில் தற்போதைய சூழல் எப்படி இருக்கிறது என்று புரிந்துக்கொள்ளுங்கள் என்று இந்த வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர்.

 ராணுவ வீரர்

ராணுவ வீரர்

இதுபோல 3 குழந்தைகளை வீரர்களிடம் தந்துள்ளனர்.. அப்படிக் கொடுக்கப்பட்ட ஒரு குழந்தையை அமெரிக்க வீரர் ஒருவர் வாங்கி தன்னுடைய சக வீரரிடம் கொடுக்கிறார்.. இந்நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க ராணுவ அதிகாரி மேஜர் ஜிம் என்பவர் விளக்கம் தந்துள்ளார்.. அதில், "ராணுவ வீரரிடம் கொடுக்கப்பட்ட குழந்தை பெண் குழந்தையாகும்... அந்த குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாலேயே அமெரிக்க வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது'' என்று விளக்கம் தந்துள்ளார்.

 விளக்கம்

விளக்கம்

அதுமட்டுமல்ல, ஏர்போர்ட்டில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த குழந்தைக்கு சிகிச்சையளிக்கபட்டபிறகு, மறுபடியும் அந்த குழந்தை அதன் அப்பாவிடமே ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்... ஆனால், இப்போது இந்த குழந்தையும், அதன் பெற்றோர்களும் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரமே தெரியவில்லை என்கிறார் பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பை..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+