Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போச்சு..இன்னொரு வங்கதேசம்? உடைந்ததா பாகிஸ்தான்? சுதந்திரத்தை அறிவித்த மிர் பலூச்!

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டிருக்கும் நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு உள்ளேயே பலுசிஸ்தான் என்ற தனி நாடு கேட்கும் ஆதரவாளர்கள் பாக்., ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பலூச் எழுத்தாளர் மிர் யார் பலூச், பலுசிஸ்தானை பாகிஸ்தானிலிருந்து பிரித்து சுதந்திர நாடாக ஐநா சபை அங்கீகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்திய அரசு பலுசிஸ்தான் தூதரகத்தை டெல்லியில் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில் தனி நாடு கேட்டு வரும் பலூச் விடுதலை ராணுவத்தின் மிர் யார் பலூச், பலூச் மக்களின் உரிமைக்காக குரல் எழுப்பி வருபவர் ஆவார். தற்போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இலக்காகக் கொண்டு ' ஆபரேசன் சிந்தூர்' நடவடிக்கையை இந்தியா தொடங்கிய நிலையில், அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

சமூகவலைதளமான எக்ஸில் தொடர்ந்து பல பதிவிட்டு வரும் மிர் யார் பாலூச், ஐ.நா. அமைதிப்படையை பலூசிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் எனவும், பாகிஸ்தான் ராணுவத்தை அப்பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Baloch Pakistan india

பாகிஸ்தானில் இருந்து பலூச், சுதந்திரத்தை அறிவித்து விட்டதாக கூறியுள்ள மி ர்யார் பலூச், பலூச் விடுதலைப் போராளிகள் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள டேரா புக்டி பகுதியில் உள்ள எரிவாயு கிணறுகளை தாக்கியதாக, பாகிஸ்தான் என்ற பயங்கரவாத நாடு விரைவில் வீழ்ச்சியடையும். நாங்கள் எங்கள் சுதந்திரத்தை அறிவித்துள்ளோம். இந்தியா, பாலூசிஸ்தான் தூதரகத்தை டெல்லியில் தொடங்க அனுமதிக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஐ.நா. உடனடியாக பலூசிஸ்தானின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும்,அனைத்து ஐ.நா. உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி ஆதரவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

பலுசிஸ்தானுக்கு உடனடியாக ஐ.நா. அமைதிப்படை அனுப்பப்பட வேண்டும். பாகிஸ்தான் இராணுவம் பலுசிஸ்தானின் நிலம், ஆகாயம் மற்றும் கடல் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். எல்லா ஆயுதங்களையும் அங்கு வைத்தே செல்ல வேண்டும், பலுசிஸ்தானில் பாகிஸ்தான் அரசு பணிபுரியும் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும். புதிய பாலூசிஸ்தான் அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும். பாலூச் பெண்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். மேலும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எங்கள் சுதந்திர விழாவில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானுக்குள் பலூச் விடுதலை ராணுவம் பலுசிஸ்தான் என்ற தனி நாடு கேட்டு பல நாட்கள் ஆகவே போராடி வருகிறது. குறிப்பாக மே 7ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து அந்த கோரிக்கை மிகத் தீவிரம் அடைந்திருக்கிறது. இந்தியா பாகிஸ்தானுக்கு வெளியே இருந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் நேரத்தில் பாகிஸ்தானுக்கு உள்ளே இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது பலூச் விடுதலை ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் பாகிஸ்தான் ராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் பலியானதாக பாலூச் விடுதலை ஆர்மி வீடியோ வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் பாலூச் பிறந்து விட்டதாகவும் அதனை இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருப்பது உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+