இந்து இளைஞர் தாக்கி தீ வைப்பு! "கடைசி நொடியில் குளத்தில்.. திக்திக்!" வங்கதேசத்தில் 4வது பயங்கரம்
டாக்கா: வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே அங்கு வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய இந்து ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அங்குச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் சூழலில், கடந்த 2 வாரங்களில் அங்கு நடக்கும் நான்காவது தாக்குதல் இதுவாகும்.
வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாகவே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்குள்ள மாணவர் தலைவர் படுகொலையைத் தொடர்ந்து இப்போது அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் ஒருவிதப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு இந்து மதத்தினர் சிறுபான்மையினராக உள்ள நிலையில், அவர்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே வங்கதேசத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

வன்முறை
அங்கு சரீயத்பூர் மாவட்டத்தில் 50 வயதான கோகான் தாஸ் மீது நேற்றைய தினம் தாக்குதல் நடந்துள்ளது. நேற்று டிசம்பர் 31ம் தேதி வன்முறைக் கும்பல் தாஸை சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளது. தாஸ் அப்பகுதியில் மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். நேற்றிரவு 9 மணியளவில் அவர் வழக்கம் போலத் தனது மருந்தகத்தை அடைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது தான் இந்த மோசமான தாக்குதல் நடந்துள்ளது.
குளத்தில் குதித்து உயிர் தப்பினார்
அவரை சூழ்ந்த வன்முறைக் கும்பல், கூரிய ஆயுதங்களைக் கொண்டு அவரை தாக்கியுள்ளனர். கத்தியால் குத்தியும் காயப்படுத்தியுள்ளனர். அத்தோடு நிற்காமல் அவர் மீது எரிபொருளை ஊற்றியும் பற்ற வைத்துள்ளனர். அங்கு அருகில் குளம் ஒன்று இருந்த நிலையில், அதில் குதித்து தாஸ் உயிர் தப்பினர். இருப்பினும், அவருக்கு மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதிகரிக்கும் வன்முறை
கடந்த இரண்டு வாரங்களில் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக டிசம்பர் 24ம் தேதி வங்கதேசத்தின் காளிமோஹர் யூனியனில் 29 வயதான அம்ரித் மண்டல் என்பவர் மர்மக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். டிசம்பர் 18ம் தேதி மைமன்சிங்கின் பாலுக்கா உபஜிலாவில் 25 வயதான தீபு சந்திர தாஸ், சக முஸ்லிம் ஊழியரால் கொல்லப்பட்டார். அவரது சடலம் மரத்தில் தொங்கவிடப்பட்டுத் தீயிடப்பட்டது. அதேபோல மற்றொரு தாக்குதலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ் வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. வங்கதேசத்தில் நடக்கும் தொடர் தாக்குதல்களுக்கு மனித உரிமைகள் அமைப்புகள் தொடர்ச்சியாகக் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள்.
இந்தியா
இந்த விவகாரம் குறித்து இந்தியாவும் கவலை தெரிவித்துள்ளது. அங்குச் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பது கவலை அளிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. அதேநேரம் வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் குற்றச்சாட்டுத் தவறானது, மிகைப்படுத்தப்பட்டது என்று நிராகரித்துள்ளது. ஆங்காங்கே நடக்கும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை அங்குக் கடந்த 2024ல் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்கு யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்தச் சூழலில் தான் அங்குப் பிப்ரவரி மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications