போர்க் குற்றம்: மேலும் ஒரு வங்கதேச அரசியல்வாதிக்கு மரண தண்டனை!
டாக்கா: வங்கதேச விடுதலைப் போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக வங்கதேசத்தில் மூத்த எதிர்கட்சித் தலைவரான சலாலுதீன் காதர் செளத்ரிக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசம் விடுதலை பெற 1971ஆம் ஆண்டு போர் நடத்தியது. அப்போது இனப்படுகொலை, கொலை, கடத்தல் ஆகிய குற்றங்களை நிகழ்த்தியதாக ஏற்கெனவே ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவர் அப்துல் குவாதர் மொல்லா மீது குற்றம்சாட்டப்பட்டது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த போது அப்துல் குவாதர் மொல்லாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் பெரும் வன்முறை வெடித்தது.
இந்நிலையில் அந்நாட்டு எம்.பி.யும் பிரதான எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாதக் கட்சியின் மூத்த தலைவருமான சலாலுதீன் காதர் சௌத்ரி மீதும் 1971ஆம் ஆண்டு விடுதலைப் போரின் போது போர்க் குற்றம் புரிந்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றமே சலாலுதீன் காதர் சௌத்ரிக்கு மரண தண்டனை விதித்துள்ளது. போர்க்குற்ற சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் முதல் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் மூத்த பிரமுகரும் சலாலுதீன் காதர் சௌத்ரிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications