Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வங்கதேசத்தில் மாணவர் தலைவர் படுகொலை.. இந்தியாவுக்கு எதிராக திரும்பிய இளைஞர்கள்! காரணம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டாக்கா: நேற்றிரவு இந்திய துணை தூதரகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தூதரகத்தை முற்றுகையிடவும் போராட்டக்காரர்கள் முயன்றிருக்கிறார்கள். என்ன நடந்தது வங்கதேசத்தில்? போராட்டக்காரர்கள் ஏன் இந்தியாவுக்கு எதிராக திரும்பினார்கள்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 12ம் தேதியன்று டாக்காவின் பிஜாய்நகர் பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இந்த சம்பவம்தான் தற்போது வங்கத்தில் மீண்டும் போராட்டம் வெடித்ததற்கான காரணமாகும்.

Bangladesh student india

வங்கதேச போராட்டம்

ஷெரீப் இஸ்மான் ஹாடி எனும் இளைஞர், வழக்கம் போல தொழுகையை முடித்துக்கொண்டு மசூதியிலிருந்து வெளியே வந்திருக்கிறார். வாசலில் அவருக்காக பைக்கில் காத்திருந்த மர்ம நபர்கள் திடீரென அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை, உதவியாளர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். மேல் சிகிச்சைக்காக அவர் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு உயிரிழந்தார். இதனையடுத்துதான் வங்கதேசத்தில் போராட்டம் வெடித்திருக்கிறது.

ஹாடியின் படுகொலை

உயிரிழந்தவர் சாதாரண ஆள் கிடையாது. அவர் வங்கதேசத்தின் இன்குலாப் மான்சா எனும் மாணவர் இயக்கத்தின் தலைவராவார். கடந்த ஆண்டு நடந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தில் இவரது பங்கு அதிகம். இவர் தீவிரமான இந்திய எதிர்ப்பு மற்றும் ஹசீனா எதிர்ப்பை கொண்டிருந்தார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் நடைபெறும் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்க இருந்தார். இப்படி இருக்கையில்தான் இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கிறது. சம்பவத்திற்கு காரணம் இந்தியாதான் என்றும், அவரது ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

புரட்சி

இந்த படுகொலைக்கு எப்படி இந்தியா காரணமாக முடியும்? ஹாடி ஆதரவாளர்களின் குற்றச்சாட்டை புரிந்துக்கொள்ள வங்கதேச அரசியலை கொஞ்சம் விளக்கிக்கொள்ள வேண்டும். கடந்தாண்டு வங்கதேசத்தில் நடந்த புரட்சியின் போது, மாணவர்களும் சாதாரண மக்களும் ஒன்றிணைந்து இருந்தனர். ஷேக் ஹசீனாவின் 16 வருட சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து இந்த கிளர்ச்சி நடந்தது. அவரது ஆட்சியில் ஊழல், அடக்குமுறை அதிகரித்து இருந்ததாக பரவலாக விமர்சனங்களை எழுந்ததை தொடர்ந்து கிளர்ச்சி நடந்தது.

வேகமாக பிரபலமா ஹாடி

வங்கதேசம் புரட்சிக்கும், கிளர்ச்சிக்கும் புதிய நாடு கிடையாது. கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த சுதந்திரப் போராட்டமும், அதைத்தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு நடந்த ஜனநாயகத்திற்கான எழுச்சியும், வங்கதேசம் கிளர்ச்சிக்கு புதியது கிடையாது என்பதை உணர்த்தி இருக்கிறது. அந்த வகையில்தான், கடந்த ஆண்டு இளைஞர்களின் கிளர்ச்சி நடந்தது.

முடிவெடுக்கும் தளத்தில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக உணர்ந்த இளைஞர்கள், புதிய அரசியலை உருவாக்க கிளர்ந்து எழுந்தனர். அப்படி உருவான பல தலைவர்களில் ஒருவர்தான் ஹாடி. டாக்கா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, மாணவர் அரசியலால் உருவானவர். எழுச்சியின் மொழி மற்றும் உணர்வுகளை அவர் அசாதாரண தெளிவுடன் வெளிப்படுத்தியதால் இளைஞர்கள் மத்தியில் வேகமாக பிரபலமானார்.

இந்தியா மீது எதிர்ப்பு

அவர் நீதியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். நீதிமன்றங்கள், காவல்துறை இதர சட்ட அமைப்புகளை கடந்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். வங்கதேசத்தை பொறுத்தவரை, புரட்சி நடந்ததும் பழைய ஒழுங்குகள் தானாகவே சரிந்து விழுந்தன. ஆனால், புதியதாக ஒழுங்கமைப்பு உருவாக்கப்படவில்லை. இதை உருவாக்குவதற்காகதான் ஹாடி வலியுறுத்தி வந்தார். குறிப்பாக வங்கதேசத்தின் மீது வெளிநாடுகளின் தலையீட்டை அவர் வெளிப்படையாக விமர்சனம் செய்தார். அதிலும் இந்தியாவின் தலையீட்டை அவர் முற்றிலுமாக எதிர்த்தார்.

ஹாடியின் வாதம்

பெரும்பாலான வங்கதேச கட்சிகள், உள்நாட்டில் நிலவி வந்த சர்வாதிகார போக்கை எதிர்த்து வந்த நிலையில், இவர் உள்நாட்டு சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வருவது மட்டுமே உண்மையான ஜனநாயகத்தை உருவாக்காது. வெளிநாடுகளில் இருந்து வரும் அழுத்தத்தையும் குறைக்க வேண்டும் என்று வாதங்களை முன்வைத்தார். வங்கதேசம் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான உறவு சிக்கலானது. நாட்டின் சுதந்திரத்தில் இந்தியா முக்கியப் பங்காற்றியது. ஆனால், அடுத்தடுத்த காலங்களில் நீர் பங்கீடு, வர்த்தகம், எல்லை மேலாண்மை மற்றும் அரசியல் தலையீடுகள் இந்தியாவிடமிருந்து அதிகரித்தன என்பதே ஹாடியின் வாதம்.

அவரது ஆதரவாளர்களை பொறுத்தவரை, இந்த நிலைப்பாடு இந்தியா மீதான விரோதத்தை அதிகரிக்க செய்தது. சர்வதேச அரசியல் களத்தில் இந்த கருத்து அவருடைய செல்வாக்கை வேகமாக அதிகரிக்க செய்தது. இதனை அடுத்துதான் அவர் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்தார். இந்த பின்னணியில்தான் அவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+