இப்படியொரு புருஷன் நமக்கு கிடைக்க மாட்டாரா?: பெண்களை ஏங்க வைக்கும் வீடியோ

Subscribe to Oneindia Tamil

ரியோடி ஜெனிரோ: பிரேசிலைச் சேர்ந்த ஒருவர் கார் விபத்தில் பலியான தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அதே போஸ்களில் மகளுடன் புகைப்படம் எடுத்து அனைவரின் மனதையும் தொட்டுவிட்டார்.

பிரேசிலைச் சேர்ந்தவர் ரபேல் டெல் கோல். பிளாக்கரான(blogger) அவரின் மனைவி கடந்த 2013ம் ஆண்டு நடந்த கார் விபத்தில் பலியானார். அவர்களுக்கு ரைசின்ஹா(4) என்ற மகள் உள்ளார். 27 வயதில் பலியான தனது மனைவியை பிரிந்த ரபேல் தனது வாழ்வில் அனைத்தும் இருந்தும் இல்லாதது போன்று உணர்ந்தார்.

அவருக்கு தனது மகளை பார்க்கையில் மனைவியின் ஞாபகம் வந்தது. திடீர் என்று ஒரு நாள் மகளை பார்த்தபோது தனது மனைவியுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்துக் கொண்ட அந்த தருணத்தை மீண்டும் வரவழைக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் புகைப்படக் கலைஞர்களை வரவழைத்து தனது மனைவியுடன் தான் எந்தெந்த போஸ்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டாரோ அதே போஸ்களில் தனது மகளுடனும் புகைப்படம் எடுத்தார். சிறுமி தனது தாயைப் போன்றே உடை, நகை மற்றும் காலணி அணிந்து புகைப்படத்திற்கு அப்பாவியாக போஸ் கொடுத்தார்.

ரபேல் தனது மனைவி இறந்த பிறகும் அவர் மீது வைத்திருக்கும் அளவில்லா காதலை பார்த்து உலக பெண்கள் உருகுகிறார்கள். ரபேல் மற்றும் ரைசின்ஹாவின் புகைப்பட ஷூட் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பார்ப்பவர்களின் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+