அல்கொய்தாவுக்கு இந்தியாவிலிருந்து ஆள் பிடித்த பெங்களூர் டாக்டர்.. சவுதி அரேபியாவில் கைது
சவுதி: அல்-கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தியாவில் உள்ள இளைஞர்களை சேர்த்து வந்த பெங்களூரை பூர்வீகமாக கொண்ட, சபீல் அகமது என்பவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரில் வசித்து வந்த டாக்டர். சபீல் அகமது குடும்பத்திற்கு தீவிரவாதத்தின் மீது ஆர்வம் அதிகம். அகமதுவின் அண்ணன் கஃபீல் கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 29ல் ஐரோப்பாவின் கிளாஸ்கோ ஏர்போர்ட்டில் உடலில் குண்டுகளை கட்டிக்கொண்டு தற்கொலை படை தாக்குதல் நடத்தி பலியானார்.

இதையடுத்து சபீல் அகமது ஐரோப்பாவில் இருந்து வெளியேற்றப்பட்டார். சவுதியில் இருந்தபடி அல்கொய்தா மற்றும் லஷ்கர் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு இந்தியாவிலுள்ள இளைஞர்களை சேர்க்கும் வேலையில் சபீல் அகமது ஈடுபட்டு வந்தார்.
இதுகுறித்து டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு, சபீல் அகமது மீது வழக்கு பதிவு செய்தது. இந்தியாவிலுள்ள அனைத்து ஏர்போர்ட்டுகளுக்கும் லுக்அவுட் சுற்றரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் சபீல் அகமது அந்த நாட்டு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது உடல் அடையாளங்கள் சரியாக ஒத்துப்போகிறதா என்பதை இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.
விரைவில் இந்தியாவுக்கு சபீல் அகமதுவை அழைத்து வர பாதுகாப்பு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சவுதி அரேபியாவிலிருந்து குற்றவாளிகளை பரிமாற்றம் செய்வதில் எந்த இடையூறும் கடந்த காலங்களில் இருந்தது இல்லை என்பதும் நினைவுகூறத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications