போபால் விஷவாயு வழக்கின் முக்கிய குற்றவாளி வாரன் ஆன்டர்சன் மரணம்- மறைக்கும் குடும்பத்தார்

கடந்த 1984ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து விஷயவாயு கசிந்ததில் 35 ஆயிரம் பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் யூனியன் கார்பைட் நிறுவனத்தின் அப்போதைய தலைவரான அமெரிக்க தொழில் அதிபர் வாரன் ஆன்டர்சன் முக்கிய குற்றவாளி ஆவார். அவர் சம்பவம் நடந்த நான்காவது நாள் போபாலில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
ஜாமீனில் வந்த அவர் அமெரிக்கா சென்றுவிட்டார். அதன் பிறகு அவர் இந்தியாவில் நடந்த வழக்கில் ஆஜராகவில்லை. அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு அமெரிக்காவுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடா மாநிலத்தில் இருக்கும் வெரோ பீச் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஆன்டர்சன் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 29ம் தேதி தனது 92வது வயதில் மரணம் அடைந்தார். ஆனால், அவர் இறந்ததை அவரது குடும்பத்தார் இதுவரை வெளியில் சொல்லாமல் மறைத்து வருகின்றனர்.
இந்நிலையில் பொது ஆவணங்களில் இருந்து ஆன்டர்சன் இறந்த செய்தி வெளியே வந்துள்ளது. பல்லாயிரம் பேர் இறந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சந்திக்காமலேயே ஆன்டர்சன் அமெரிக்காவில் வாழ்ந்து இறந்துவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications