பிக்பாஸ்-3 டைட்டில் வென்ற முகேன் ராவ்-க்கு மலேசியாவில் செம உற்சாக வரவேற்பு
Recommended Video
கோலாலம்பூர்: விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ்-3 சீசனின் டைட்டில் வென்று நாடு திரும்பிய முகேன் ராவ்-க்கு மலேசியாவில் உறவினர்களும் ரசிகர்களும் உற்சாக வரவேற்பளித்தனர்.
பிக்பாஸ் சீசன் -3 ல் இம்முறை மலேசியாவின் முகேன் ராவ், ஈழத்தின் தர்ஷன், லொஸ்லியா என அறிமுகம் இல்லாதவர்களும் பங்கேற்றனர். இதனால் உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

வழக்கம் போல பிக்பாஸ் வீடுகளில் நடைபெறும் அத்தனை அக்கப்போர்களும் சுவாரசியங்களும் இம்முறைக்கும் குறைவில்லை.. கடந்த முறைகளை விட இம்முறை காதல் காட்சிகள் அதிகம்.
இந்த சீசனில் மலேசியாவின் முகேன் ராவ் டைட்டில் பட்டத்தை கைப்பற்றி பரிசுத் தொகையான ரூ50 லட்சம் பெற்றார். பிக்பாஸ் 3- சீசன் டைட்டில் வென்ற முகேன் ராவ் நேற்று மலேசியாவுக்கு திரும்பினார்.
அங்கு சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது. பத்துமலை முருகன் கோவில் முன்பாக திறந்த வாகனத்தில் ஏறி நின்று தாம் பெற்ற பிக்பாஸ் கோப்பையை ரசிகர்களிடம் காட்டி அன்பைப் பெற்றார். அப்போது பேசிய முகேன் ராவ், பிக்பாஸ் போட்டியில் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனக்கு ஆதரவு அளித்த அத்தனை மலேசிய மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றார். முன்னதாக முகேன் ராவை வரவேற்க கோலாலம்பூர் விமான நிலையத்தில் பல மணிநேரம் ரசிகர்கள் காத்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications