"மர்மம்".. தொடுவானத்தில் திடீரென தோன்றிய "பர்பிள்" நிற கோடு! பதறிய மக்கள்.. விசாரித்தால்.. ட்விஸ்ட்
சாண்டியாகோ: சிலி நாட்டில் தொடு வானத்தில் திடீரென பர்பிள் நிறத்தில் கோடுகள் தெரிந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வானத்தில் அவ்வப்போது விசித்திரமான வண்ணங்கள் தோன்றுவது சமீப காலமாக வழக்கமாக வருகிறது. சூரியனில் இருந்து வரும் சோலார் காற்று காரணமாக அவ்வப்போது துருவ பகுதிகளில் இப்படி வானம் வண்ணமாக தோன்றும்.
இதை southern lights மற்றும் northern lights என்று அழைப்பார்கள். துருவ பகுதிகளில் இந்த வெளிச்சம் ஏற்படும் போது வானம் மொத்தமாக வண்ணமாக மாறி காணப்படும்.
இந்த துருவ பகுதிகள் இல்லாமல் வேறு நாடுகளிலும் அவ்வப்போது வானத்தில் வேறு வேறு காரணங்களுக்காக வண்ணங்கள் ஏற்படும்.

வண்ணம்
அப்படித்தான் சிலி நாட்டில் திடீரென வானத்தில் பர்பிள் நிற கோடுகள் தோன்றி உள்ளன. தொடு வானத்தில் இந்த கோடுகள் தோன்றி உள்ளது. நம் நாட்டில் சூரியன் மறையும் நேரத்தில் எப்படி செவ்வானம் தோன்றும். அந்த செவ்வானம் போலவே தொடுவனத்தில் இந்த வண்ணங்கள் தோன்றி உள்ளன. இதை பார்த்து அப்பகுதி மக்கள் குழம்பி போய் உள்ளனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலரும் ஆச்சச்சர்யத்தில் மூழ்கி உள்ளனர்.

விசாரணை
அப்பகுதி மக்கள் சிலர் இதனால் அச்சம் அடைந்தும் உள்ளனர். சிலர் ஏலியன் வருவதாக வதந்தி கிளப்பி உள்ளனர். சிலர் இது அழிவிற்கான அறிகுறி என்று பேசி உள்ளனர். இன்னும் சிலர் அருகில் எங்காவது கெமிக்கல் கசிந்து இருக்கலாம். அதனால் இப்படி நடக்கலாம் என்று பயமுறுத்தி உள்ளனர். இதையடுத்து உள்ளூர் நிர்வாகிகள் சிலர் உடனே இதை பற்றி விசாரித்து உள்ளனர்.

என்ன காரணம்
முதலில் அருகில் இருந்த வானிலை மைய அதிகாரிகளிடம் இதை பற்றி விசாரித்து உள்ளனர். அவர்களும் சாட்டிலைட் புகைப்படங்களை எல்லாம் சோதனை செய்துள்ளனர். இது வானிலை காரணமாக ஏற்படவில்லை என்று கண்டுபிடித்துள்ளனர். இதன்பின்தான் தொடர் சோதனையில்.. அங்கு இருந்த உப்பு மாற்று அயோடின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட கசிவு காரணமாக இப்படி வானம் நிறம் மாறியதை கண்டுபிடித்துள்ளனர்.

எப்படி நடந்தது?
அந்த தொழிற்சாலையில் இருந்த பம்ப் ஒன்று செயல் இழந்துள்ளது. இதன் காரணமாக அயோடின் திட நிலையில் இருந்து வாயு நிலைக்கு சென்றுள்ளது. இது காற்றில் கலந்து ஏற்பட்ட வினை காரணமாக..காற்றில் பர்பிள் நிறத்தில் புகைப்படம் போன்ற படம் தெரிந்துள்ளது. இது அப்படியே பெரிதாகி தொடுவனத்தில் கோடு போல ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அயோடின் கசிவு காரணமாக யாருக்கும் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications