வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் கொடி! பலுசிஸ்தானில் பலூச் கொடியை ஏற்றிய போராளிகள்! உள்நாட்டிலும் பயங்கர அடி
இஸ்லாமாபாத்: இந்தியா மீது பாகிஸ்தான் தேவையில்லாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதேநேரம் மற்றொருபக்கம் பாகிஸ்தான் உள்நாட்டிலேயே அடி வாங்கி வருகிறது. பலுசிஸ்தானில் ராணுவம் மீதான தாக்குதலைப் போராளிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே அங்கு பாகிஸ்தான் கொடிகள் வீழ்த்தப்பட்ட பலுசிஸ்தான் கொடிகள் ஏற்றப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களையே இந்தியா அழித்தது. ஆனால், பாகிஸ்தான் இப்போது வட கிழக்குப் பகுதியில் பொதுமக்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்த முயன்று வருகிறது.

பலுசிஸ்தான்
இருப்பினும், இந்திய ராணுவம் அதைத் தொடர்ந்து முறியடித்து வருகிறது. மேலும், தக்கப் பதிலடியையும் பாகிஸ்தானுக்குக் கொடுத்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க பாகிஸ்தான் ராணுவம் பலூச் போராளிகளிடமும் அடி வாங்கி வருகிறார்கள். பலூச் போராளிகளும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் மேற்கு மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்கக்கோரி இவர்கள் ஆயுதமேந்திப் போரிட்டு வருகிறார்கள். இதற்கிடையே இப்போது பலுசிஸ்தானின் சில பகுதிகளைப் போராளி குழு கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அங்குப் பல பலுசிஸ்தான் போராளிகள் பாகிஸ்தான் படைகளைக் குறிவைத்துத் தாக்கி வருகிறார்கள்.
வீழ்த்தப்படும் பாகிஸ்தான் கொடிகள்
இதற்கிடையே பலுசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தானின் கொடிகளை வீழ்த்திவிட்டு, பலுச் மக்கள் தங்கள் கொடிகளை ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. அதேபோல பலுச் போராளி குழுக்கள் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதாகவும், சில இடங்களில் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது தேவையில்லாமல் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் கவனம் இந்தியா பக்கம் இருப்பதால், இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளும் பலுசிஸ்தான் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தீவிரமடையும் தாக்குதல்
கடந்த இரண்டு குவெட்டாவின் பைசாபாத் பகுதியில் பலூச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தான் படைகளைத் தாக்கினர். இதில் 4 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல சிப்பி என்ற பகுதியிலும் உள்ள பாக். ராணுவ முகாமில் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கடந்த வியாழக்கிழமை, பலுச் விடுதலை ராணுவம் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். கெச், மஸ்துங் மற்றும் கச்சி ஆகிய இடங்களில் தனித்தனியாக ஆறு இடங்களில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலுச் கொடிகள்
இது தொடர்பாக பலுச் எழுத்தாளர் மிர் யார் (Mir Yar) தனது ட்விட்டரில், "பலுச் மக்கள் பாகிஸ்தான் கொடிகளை வீழ்த்திவிட்டு, தங்கள் சொந்தக் கொடிகளை ஏற்ற தொடங்கியுள்ளனர். உலக நாடுகள் தங்கள் தூதர்களை பாகிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்று, புதிதாக வளர்ந்து வரும் பலுசிஸ்தானுக்கு மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பாகிஸ்தானுக்கு இனி இடமில்லை.. புதிய பலுசிஸ்தானை வரவேற்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
கன்ட்ரோலை இழக்கும் பாக். ராணுவம்
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் கன்ட்ரோலை இழந்து வருவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷாஹித் ககான் அப்பாசி என்பவரே கூறியிருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக அவர் கூறுகையில், "பலுசிஸ்தானில் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் தனது கட்டுப்பாட்டை இழந்து வருகிறது. இரவு நேரங்களில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான தாக்குதல்கள் நடந்து வருகிறது.
அவ்வளவு ஏன் பலுசிஸ்தானில் மூத்த அரசு அதிகாரிகளும் அமைச்சர்களும் கடுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியே கூட வர முடியாத சூழலே இருக்கிறது. இங்குப் போராளிகள் குறைவாகவே இருப்பதாக ராணுவத் தளபதி அசிம் முனீர் சொல்வது பொய். போராளிகள் வலிமையாகிக் கொண்டே செல்கிறார்கள்" என்றார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications