Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவப்பெட்டி தலையன்! அட்ட கரிவாயன்! கொத்துனா உயிர் இருக்கானு பார்க்கும் கருப்பு மாம்பா பாம்புகள்!

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: கருப்பு மாம்பா பாம்புகள் உலகிலேயே அதிக விஷம் கொண்ட பாம்புகளில் 2ஆவது இடத்தில் உள்ளது. இது வாயை திறந்தால் கருப்பாக இருக்கும். மரத்தில் இருந்து தாவி தாவி கடிக்கும். கடித்தவர்கள் இறந்துவிட்டார்களா என பார்த்துவிட்டுதான் அந்த இடத்தை விட்டு நகருமாம்.

இதுகுறித்து தமிழ் கோராவில் முன்னாள் ஆசிரியையான ரங்கம் அருணாசலா என்பவர் தனது பதிவில் கூறியிருப்பதாவது: கறுப்பு மாம்பா..

snakes international

"பாம்பென்றால் படையும் நடுங்கும்"..
சாதாரண பாம்புக்கே இப்படி என்றால்.. உலகின் அதிக விஷமுள்ள பாம்பென்றால்,?? நாம் பார்க்கப் போவது 'கறுப்பு மாம்பா' ..

'பிளாக் மாம்பா ' (black mamba) என்றே சொல்லுவோம். ஏனெனில் தமிழ் நாட்டை விட்டு வெளியே போனால் கறுப்பு என கூறினால் சிலருக்கு புரியாது. பிளாக் என்றால்தான் புரியும். ' மாம்பா' என்பது ஜூலு வார்த்தை.

உலகில் அதிக விஷமுள்ள பாம்பின் வரிசையில் முதலிடம் ராஜ நாகம் எனப்படும் ' கிங் கோப்ரா' .. உலகிலேயே விஷமுள்ள பாம்புகளில் இரண்டாம் இடம் இந்த பிளாக் மாம்பா. பொதுவாக கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்க பகுதிகளில் இவை வாழ்கின்றன.

ஆலிவ், பழுப்பு, காக்கி, கன் மெட்டல் போன்ற நிறங்களில் இவை காணப்படுகின்றன. இளம் வயதில் சற்றே வெளிர் நிறம். வளர்ந்த பிறகு அடர் நிறம்.

வாயைத் திறந்தால்?? உள்ளே அப்படி ஒரு மை கருப்பு.. இதனாலேயே இதற்கு இப்பெயர். பொதுவாக பாறை இடுக்குகள், குகைகள், மரப் பிளவுகள், மர விரிசல்களிலும், கைவிடப்பட்ட கரையான் புற்றுகளிலும் வசிக்கின்றன.

எவ்வளவு வளரும்: பொதுவாக ஆறு அடி முதல் ஏழு அடிவரை நீளம். சில பாம்புகள் எட்டு முதல் 15 அடி வரை வளரக்கூடியவை.. நீண்ட மெல்லிய உருளை வடிவம்.. வாழ்நாள் 11 வருடங்கள்.

வெப்ப ரத்த பிராணிகள் மிகவும் பிடிக்கும். சிறு பறவைகள், விலங்குகள், சிறு பாம்புகள், முட்டைகள். எலிகள் என்றால் மிகவும் பிடித்த உணவு. மிகவும் வேகமானது.. மணிக்கு 20 கி.மீ அநாயாசமாக நகரும். உடல் நீளத்தில் 40% அளவுக்கு தரையில் இருந்து எம்பி நிற்கும். உணவு மிகவும் திருப்தி என்றால்.. அதன் பிறகு இரை தேடாமல் வாரக் கணக்கில் இருக்கும்.

எச்சரிக்கை: யாரையும் இவை வழியச் சென்று தாக்குவதில்லை. பாதுகாப்பாக தனது இருப்பிடம் சென்று விடவே அனைத்து பாம்புகளும் விரும்புகின்றன. 40 மீட்டர் தூரம் வரை கண்களில் பட்டால்.. கவனமுடன் இருக்கும். எல்லை தாண்டினால்?? முதல் எச்சரிக்கை.. தனது சவப்பெட்டி வடிவ, கருப்பு வாயை திறந்து, குறுகிய கழுத்து மடிப்பை விரித்து எச்சரிக்கை செய்யும்.

4 அடி உயரத்திற்கு உயரும்: அப்புறம் விடாது துரத்தும். தனது உடலை நான்கு அடி உயரத்திற்கு உயர்த்தி கொண்டே ஓடும். முடிந்தால் வாயிலேயே கொத்தும். அது உயரமாக எழும்பி கொத்துவதால், பெரும்பாலும் கடி... உடம்பின் மேல் பகுதியில் தான் விழும். சில நேரங்களில் அடுத்தடுத்து இரண்டு முறை கொத்தும்.

சூரிய குளியல்: மரத்திலிருந்து ஆரம்பித்தால் அப்படியே மேலே எழும்பி ..வந்து பாயும். தனது இரையை தேடும் முன் இவைகள் காலை 7 முதல் 10 மணி, மாலையில் 2 முதல் 4 மணி வரையும் தங்கள் உடலை சூரிய ஒளியில் காட்டி, சூடுபடுத்திக் கொள்கின்றன. அதாவது சூரிய குளியல்.

இவை கடிக்கும் போது 50 மி.கி முதல் 100 மி.கிராம் வரை விஷத்தை பீய்ச்சி அடிக்கின்றன. ஒரு ஆளைக் கொல்ல 10 மி.கி விஷம் போதும். இந்த விஷம் நியூரோடாக்சின்களால் ஆனது.

பொறுமை காக்கும் மாம்பா: கடித்த பிறகு சற்று விலகி அந்த உயிர் மரணம் அடையும் வரை பொறுமையாக காத்திருக்கும் . அடுத்த பத்து நிமிடங்களில் விஷத்தின் விளைவுகளை உடல் உணர ஆரம்பிக்கும்.

அறிகுறிகள்: உடனடியாக விஷ முறிவு சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால்.. நாக்கில் உலோக சுவை, கண் இமைகள் செருகல், பக்கவாதம், பார்வை மங்கல், தோலில் ஒரு விதமான கூச்ச உணர்வு, பேச்சு குளறல், வியர்த்தல், மூச்சு திணறல், உமிழ் நீர் வடிதல், கண்கள் சிவத்தல் முடிவில் மரணம் ஏற்படும்.

கடித்த ஒருவர் 7 மணி நேரம் முதல் 15 மணி நேரத்தில் மரணம் அடைவார். சிறு உயிரினங்கள் விரைவில் பலியாகி விடும். கடித்த உடன் உடனடியாக கட்டு போட்டு, அவரை அமர்த்தி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

போதை பொருள்: கழுத்தில், வாயில் கடித்தால்?? கேட்கவே வேண்டாம். இதன் சிறிதளவு விஷம் சேர்க்கப்பட்டு போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. அடிக்கடி எடுத்துக் கொண்டாலும் மரணம் நிச்சயம்.

இவை எப்போதும் தங்களது இணையுடன் பிரியாமல் வாழ்கின்றன என்றும், ஆப்பிரிக்க பகுதிகளில் இவற்றில் ஒன்றை கொன்றால் மற்றொன்று கண்டிப்பாக பழி வாங்கும் என்று நம்புகின்றனர்.

இணையுடன் வாழும்: ஒரு கணவன் தனது மனைவியை வேடிக்கையாக பயமுறுத்த, தான் கொன்ற மாம்பாவை, வீட்டிற்கு எடுத்து வந்தான். அந்த பெண் மாம்பா அப்போது இனச் சேர்க்க காலத்தில் இருந்தது. மோப்பம் பிடித்து, தேடி வந்த ஆண் மாம்பா அவனது மனைவியை கடித்து கொன்றதாம். எனவே இந்த பாம்புகளை கொன்றதும் வெகு தூரம் இழுத்துச் சென்று போட்டு விடுகிறார்கள்.

பொதுவாகவே மனிதர்கள் அதிகமாக கடிபடுவது இந்த இனப்பெருக்க காலங்களில் தான் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

20 முட்டைகள்: முட்டையிட்டு குட்டி போடும். ஒரே வேளையில் ஐந்து முதல் இருபது வரை முட்டைகளை இடும். ஆனால் அடைகாப்பதில்லை. தானாகவே பொரிந்து வெளியே வரும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+