நடுவானில் சோமாலிய விமானத்தில் குண்டுவெடிப்பு: பயணி கீழே விழுந்து பலி
மொகதிஷு: சோமாலியாவில் விமானம் ஒன்று நடுவானில் பறக்கையில் குண்டு வெடித்ததால் ஓட்டை விழுந்து பயணி ஒருவர் பலியானார், 2 பேர் காயம் அடைந்தனர்.
சோமாலியா தலைநகர் மொகதிஷுவில் இருந்து 74 பயணிகளுடன் டால்லோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஜிபோட்டிக்கு புதன்கிழமை கிளம்பியது. 11 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீர் என்று விமானத்தின் வலது பக்கத்தில் ஓட்டை விழுந்தது.

விமானத்தில் சிறிய அளவில் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டதால் தான் ஓட்டை விழுந்தது என்று விமானி தெரிவித்துள்ளார். விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானத்தில் ஓட்டை விழுந்ததில் 2 பேர் காயம் அடைந்தனர். ஓட்டை வழியாக ஒரு பயணி கீழே விழுந்து பலியானார். குண்டு வெடித்த பிறகு எடுக்கப்பட்ட வீடியோவில் பயணிகள் விமானத்தில் அச்சத்துடன் அமர்ந்திருந்ததை பார்க்க முடிகிறது.
விமானத்தில் அல் கொய்தா ஆதரவு அமைப்பான ஷெபாப் தீவிரவாதிகள் தான் குண்டு வைத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications