Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாறுமாறாக சுட்ட தீவிரவாதி! வெறும் கையில் மடக்கி பிடித்த நபர்! ஆஸ்திரேலியாவில் 12 பேர் பலி! திக்திக் வீடியோ

Subscribe to Oneindia Tamil

கன்பரா: ஆஸ்திரேலியாவின் சிட்னியில் யூத மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியின்போது மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது முதியவர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

உலகளவில் துப்பாக்கி சார்ந்த சட்டங்கள் மிகக் கடுமையாக இருக்கும் நாடுகளில் ஒன்று ஆஸ்திரேலியா.. அமெரிக்கா போன்ற நாடுகளில் துப்பாக்கி வைத்திருக்கப் பெரிய சட்டங்கள் இல்லை. ஆனால், ஆஸ்திரேலியாவில் இதற்கு மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. இருப்பினும், அதையும் தாண்டி ஒரு மோசமான சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

Bondi Beach Sydney Shooting Video Unarmed Hero Tackles Australian Shooter Hiding Behind Tree

துப்பாக்கி சூடு

அங்குள்ள சிட்னி நகரில் உள்ள பாண்டி கடற்கரையில், யூத மத நிகழ்ச்சியின்போது மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இரு நபர்கள் நடத்திய மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சிலர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தை "பயங்கரவாதச் சம்பவம்" என நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை ஆணையர் மால் லானியன் அறிவித்துள்ளார். இந்தத் தாக்குதல் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பதிலடியில் இறங்கினர். அதில் தாக்குதல் நடத்திய ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், காவலர்கள் உட்பட சுமார் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

திக்திக் வீடியோ

தாக்குதல் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒருவர் சாலையின் ஓரம் நின்று துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டு இருக்கிறார். மற்றொரு நபர் சற்று தூரத்தில் நடை மேம்பாலம் மேலே நின்று துப்பாக்கியால் சூடுகிறார். அங்குக் கூடியிருந்த மக்கள் தெறித்து ஓடுகிறார்கள். இந்தக் காட்சி பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

என்ன நடந்தது!

அந்தப் பதற்றமான சூழலிலும் அங்கிருந்த நபர் ஒருவர் துணிச்சலாகச் செயல்பட்டு இருக்கிறார். சாலை ஓரம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இருந்த நபர் அருகே சென்ற அவர், காரின் பின்னால் மறைந்து இருக்கிறார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை பிடித்துத் தள்ளுகிறார். அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிக்கிறார். அதன் பிறகே போலீசாரும் தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத்தி, சம்பவத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகிறார்கள் அந்த நபர் மட்டும் துணிச்சலாகச் செயல்படவில்லை என்றால் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்திருக்கும் என அஞ்சப்படுகிறது. அவரது இந்த வீர தீரச் செயலை ஒட்டுமொத்த இணையமும் பாராட்டி வருகிறது.

இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம், எட்டு நாட்கள் நடைபெறும் யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் போது நடந்துள்ளது. இந்த பண்டிகையின் முதல் நாள் இரவு திட்டமிட்டு அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹனுக்கா பண்டிகை தொடக்க நிகழ்வுக்காக நூற்றுக்கணக்கானோர் கடற்கரையில் கூடி இருந்தபோது, உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தீவிரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.. மற்றொரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்த பிறகு, அவரிடமும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+