சொன்னது நீ தானா...: கண்ணாதாசனுடன் நான் - பேராசிரியர் மன்சூரின் நினைவலைகள்
அஜ்மான்: கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் - காலத்தின் பதிவுகள், ஒரு நூல் பற்றி ஒரு நூல் வெளியீடுகள் மற்றும் தமிழ்த்தேர் ஜியாவுதீன் பிறந்தநாள் விழா 25.10.2013 அன்று மதியம் 2.00 மணி அளவில் அஜ்மான் சிவ ஸ்டார் பவனில் திரு. எஸ்.எம்.பாரூக் தலைமையில் நடைபெற்றது.
செல்வி. ஆனிஷாவின் குரலில் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சியினை திருமதி. நர்கீஸ் பானு அவர்கள் தமக்கே உரிய பாணியில் தொகுத்தளித்தார். முதலில் தலைமை தாங்கிய திரு. எஸ்.எம்.பாரூக் அவர்கள் தலைமை உரையாற்றினார். தமிழுக்காக செய்யப்படும் சேவையும் வெகுவாகப் பாராட்டினார்.

அதிரை கலாம் அவர்கள் முன்னிலை வகித்து தன் கவிதையை வழங்கி அமர்ந்தார். நிகழ்ச்சியில் செல்வி. ஆனிஷா, கண்ணதாசன் பற்றி கவிதை ஒன்றை வழங்கி அனைவரின் பாராட்டைப் பெற்றார். திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் முனைவர் மன்சூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மன்சூர் அவர்களுக்கு கவிஞர் காவிரிமைந்தன் பொன்னாடை போர்த்தினார். நினைவுப் பரிசை கவிஞர் ஜியாவுதீன் வழங்கினார். திரு. எஸ்.எம்.பாரூக் அவர்களுக்கு விராலிமலை ஜெயப்ரதீப் பொன்னாடை போர்த்தினார். உதகை குறிஞ்சிதாசன் நினைவுப்பரிசு வழங்கினார்.
அதைத் தொடர்ந்து கவிஞர் காவிரிமைந்தன் எழுதிய கவியரசு கண்ணதாசன் பாடல்கள் காலத்தின் பதிவுகள் நூல் வெளியிடப்பட்டது. முதல் பிரதியை பேராசிரியர் முனைவர் மன்சூர் வெளியிட திருமதி. நர்கீஸ் பானு அவர்கள் பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை முதுவை ஹிதாயத்துல்லா வெளியிட கவிஞர் ஜெயராமன் ஆனந்தி அவர்கள் பெற்றுக் கொண்டார். மூன்றாம் பிரதியை தமிழ்த்தேர் ஜியாவுதீன் வெளியிட கவிஞர் வெற்றிவேல் செழியன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
ஒரு நூல் பற்றிய ஒரு நூல் - (துபாய் வாழ் மக்கள் நெஞ்சில் கண்ணதாசன்) நூலின் முதல் பிரதியை திரு. எஸ்.எம்.பாரூக் வெளியிட திருமதி. ஸ்வேதா கோபால் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் பிரதியை ஹெல்த் கணேசன் வெளியிட புகைப்படக் கலைஞர் இப்ராஹிம் அவர்கள் பெற்றுக்கொண்டார். மூன்றாம் பிரதியை கவிஞர் ரமணி வெளியிட கவிஞர் ஆதிபழனி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
முதல் நூலின் மதிப்புரையை கவிஞர் அதிரை இளைய சாகுல் அவர்களும், இரண்டாம் நூலின் மதிப்புரையை கவிஞர் ஸ்வேதா கோபால் அவர்களும் தக்கதோர் முறையில் மதிப்பீடு தந்தார்கள்.
நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கிய பேச்சாளர் திண்டுக்கல் ஜமால் அவர்களும், கவிஞர் தஞ்சாவூரான் அவர்களும், அபுதாபி கவிஞர் மானுடப்ரியன் (குத்புதீன் ஐபக்)அவர்களும் நெஞ்சம் நிறைய வாழ்த்துரைத்தார்கள். சிறப்புரை ஆற்றிய மன்சூர் அவர்கள் கவிஞரோடு தானிருந்த அந்த நாளை பசுமையாக நினைவு கூர்ந்தார்.
சொன்னது நீ தானா ... பால் வண்ணம் பருவம் கண்டு போன்ற பாடல்களுக்கு கவியரசு கண்ணதாசன் தானே நேரில் பேராசிரியருக்கு விளக்கம் தந்ததை சபையில் சுவைபட எடுத்துரைத்தார். கலைஞரின் கரங்களால் புத்தகம் வெளியிட்ட காவிரிமைந்தன் அவர்களின் நூலை இன்று வெளியிடக் கிடைத்த பேறு வாழ்வில் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டார். நல்லோர் ஒன்று கூட .. சொல்.. மொழி.. வளம் பெற .. எல்லா வகையிலும் உதவி செய்யும் சிவ ஸ்டார் கோவிந்தராஜ் அவர்களை நன்றியோடு பாராட்டினார்.
காவிரிமைந்தனின் இந்த நூல்கள் கண்டு வியப்படைகிறேன்.. அவரின் கண்ணதாசன் பற்று நாவுக்கரசர் பற்றைப்போல் புனிதமானது என்று புகழ்ந்துரைத்தார்.
நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக தமிழ்தேர் ஜியாவுதீன் அவர்களின் பிறந்தநாள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டிக் கொண்டாடியபோது நெஞ்சம் நெகிழ்ந்தார். எல்லோருக்கும் நன்றிகளை காணிக்கையாக்கினார். விழா ஏற்பாடுகளை எஸ்.எம்.பாருக், கவிஞர் காவிரிமைந்தன், கவிஞர் ஜியாவுதீன் முதுவை ஹிதாயத்துல்லா, திண்டுக்கல் ஜமால் எம். இப்ராஹீம், கவிஞர் ஜெயராமன் ஆனந்தி கவிஞர் ஆதிபழனி ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications