For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னாது "டவுசர்" போடக் கூடாதா.. குட்டை பாவாடையில் வந்து மாணவர்கள் போராட்டம்

இங்கிலாந்து பள்ளியில் ட்ரவுசர் அணிய தடை விதிக்கப்பட்டதால் மாணவர்கள் மாணவிகள் அணியும் குட்டை பாவாடைகளை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

லண்டன்: ஒரு பள்ளியில் ட்ரவுசர் அணிய தடை விதிக்கப்பட்டதால் மாணவர்கள் குட்டை பாவாடை அணிந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இங்கிலாந்தில் எக்சிடர் நகரில் இஸ்கா பள்ளி அகாதெமி உள்ளது. தற்போது அந்த பகுதியில் வெப்பம் நிலவி வருவதால் இஸ்கா பள்ளி மாணவர்கள் ட்ரவுசர் (அரைக்கால் சட்டை) அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

boys wear skirts to school in sweltering heat to protest against 'no shorts' policy

பள்ளிக்கு ட்ரவுசர் அணிய தடை இருப்பதால் அவர்களை பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது மாணவர்கள், வெப்பமான சூழல் நிலவி வரும் நிலையில் முழுகால் சட்டை (பேண்ட்) அணிந்து வந்தால் மிகவும் அசௌகரியமாக உள்ளது. அதனால்தான் ட்ரவுடர் அணிந்து வந்தோம். ஆனால் பள்ளி நிர்வாகம் அதற்கு அனுமதிக்கவில்லை என்றனர்.

இதைத் தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பெண்கள் அணியும் குட்டை பாவாடையை அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசரியர் கூறுகையில், இந்த பள்ளியின் சீருடையில் ட்ரவுசர் அணிந்து வரக் கூடாது. என்றாலும் வெப்பம் காரணமாக மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

English summary
A group of 30 boys turned up to school wearing skirts to protest against a uniform policy that does not allow them to wear shorts despite the sweltering heat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X