3 முறை பாசிட்டிவ் என விடாது கருப்பாக தொடர்ந்த கொரோனா.. 4ஆவது டெஸ்டில் பிரேசில் அதிபருக்கு நெகட்டிவ்
பிரேசிலியா: 3 முறை பாசிட்டிவ் என வந்து பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சோனேரோவை விடாது கருப்பு போல் பின்தொடர்ந்த கொரோனா, தற்போது 4ஆவது முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துவிட்டது.
பிரேசிலில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் கொரோனா பாதித்த நாடுகளில் பிரேசில், படுவேகமாக அதிக பாதிப்புகளை கொண்டு 2-ஆவது இடத்தில் உள்ளது.
இத்தனை பாதிப்புகள் இருக்கும் போதிலும் பிரேசிலில் ஊரடங்கையும் மாஸ்க் அணிவதையும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனேரோ அமல்படுத்தவில்லை. சிறிய வைரஸ் என்ன செய்யும் என கூறி ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்காமல் இருந்தார்.

முதல்முறை பாசிட்டிவ்
அவரது பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட அனைவரும் மாஸ்க்குகளை அணிந்து கொண்டாலும் அவர் மட்டும் மாஸ்க் அணியாமல் வலம் வந்தார். தனது ஆதரவாளர்களுக்கு கைகுலுக்குவது, கட்டி அணைப்பது ஆகிய கொரோனாவுக்கு பிடித்தமான விஷயங்களை செய்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜூலை 7-ஆம் தேதி நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என வந்தது. இதையடுத்து அவர் தன்னை தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மீண்டும் பாசிட்டிவ்
இதையடுத்து இவருக்கு கடந்த 15-ஆம் தேதி மீண்டும் ஒருமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர் மீண்டும் தனிமைப்படுத்திக் கொண்ட போல்சோனேரோ,மீண்டும் கொரோனா பரிசோதனை செய்வேன் என தெரிவித்திருந்தார்.

21ஆம் தேதி கொரோனா சோதனை
இந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் 3-ஆவது முறையாக 21-ஆம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதியானதாக அதிபர் மாளிகை செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது. எனினும் அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.
Recommended Video

4ஆவது முறை நெகட்டிவ்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளை உட்கொண்டு வந்த அவர் 4 ஆவது முறையாக நேற்று கொரோனா சோதனை எடுத்துக் கொண்டார். அதில் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அதிபர், தனது பேஸ்புக் பக்கத்தில் அனைவருக்கும் வணக்கம், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளேன் என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications