சிறுமியை பலாத்காரம் செய்த நபரை கட்டிவைத்து 'உறுப்பை' வெட்டிய உறவினர்கள்
ரியோடி ஜெனிரோ: மூன்று வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 66 வயது நபரை கட்டி வைத்து அவரது ஆணுறுப்பையும், விரல்களையும் வெட்டி எறிந்தனர், சிறுமியின் உறவினர்கள்.
பிரேசில் நாட்டின், செவரினியா என்ற பகுதியில் வசிப்பவர் பிரான்சிஸ்கோ டிசோசா காஸ்ட்ரோ (66). இவர் தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வெளியே சென்ற சிறுமி காலதாமதமாக வீட்டுக்கு வந்ததை பார்த்த தாய், அதுகுறித்து கேட்டதற்கு, காஸ்ட்ரோ தன்னிடம் தவறாக நடந்துகொண்ட விஷயத்தை சிறுமி தெரிவித்துள்ளாள்.
இதை கேள்விப்பட்டதும், ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்த தாய் தனது உறவினர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதைக்கேட்டதும், கார்களில் வந்திறங்கிய உறவினர்கள் நேராக காஸ்ட்ரோ வீட்டுக்குச் சென்றுள்ளனர். அவரை அடித்து உதைத்து கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர்.
இதன்பிறகு கத்தியை எடுத்து அவரது ஆணுறுப்பை வெட்டி எறிந்தனர். அப்படியும் ஆத்திரம் குறையாமல், அந்த நபரின் மூன்று விரல்களையும் வெட்டி எறிந்துவிட்டு தப்பியோடிவிட்டனர். வலியால் அலறிக்கொண்டிருந்த காஸ்ட்ரோவை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவரது ஆணுறுப்பையும், விரல்களையும் எடுத்துக் கொண்டு டாக்டர்களிடம் கொடுத்து மீண்டும் அதை உடலில் பொருத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் டாக்டர்களோ, காலதாமதம் ஆகிவிட்டதால், எந்த உறுப்பையும் உடலில் பொருத்த முடியாது என்று கைவிரித்துவிட்டனர். ரத்தம் அதிகப்படியாக வெளியேறியதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் காஸ்ட்ரோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications