இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்.. BRICS அமைப்புதான் இனி எல்லாம்! இது நல்லா இருக்கே!
ரியோ டி ஜெனிரோ: இந்த ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ளது. இதற்கான முன் தயாரிப்பு கூட்டம் தற்போது நடத்தப்பட்டிருக்கிறது. இதில் இந்தியா பங்கேற்றிருந்த நிலையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்த முடிவுகள் இந்தியாவை பொருளாதார ரீதியாகவும், தலைமை பண்புக்கும் உயர்த்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நேற்று பிரிக்ஸ் நாடுகளின் ஷெர்பஸ் கூட்டம் நடைபெற்றது. பிரிக்ஸ் மாநாட்டின் தயாரிப்புகளை முன்னெடுக்கும் நபர்களைத்தான் 'ஷெர்பஸ்' என்று அழைப்பார்கள். அந்த வகையில் இந்தியாவிலிருந்து அதிகாரி டம்மு ரவி பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தில் பல முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயங்கள் அனைத்தும் இந்தியாவுக்கு மிக முக்கியமானதாகும். இவை சாத்தியமாகும் பட்சத்தில் இந்தியா புதிய வளர்ச்சியை எட்டும்.
பன்முகத்தன்மை
நிலைத்த வளர்ச்சி
பிரிக்ஸ் நாடுகளுக்குள் ஒத்துழைப்பை அதிகரித்தல்
இந்த மூன்று விஷயங்கள்தான் இக்கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. இதனை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் உறுதி செய்திருக்கிறார். சரி இவை எப்படி இந்தியாவுக்கான வாய்ப்பை உருவாக்கும் என்று பார்ப்போம்.
பிரிக்ஸ் அமைப்பில் தொடக்கத்தில் வெறும் 5 நாடுகள் மட்டுமே இருந்தன. இப்போது சுமார் 9 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. இந்த நாடுகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் எனில், பன்முகத்தன்மை மிக முக்கியம். அதாவது பிரிக்ஸ் அமைப்பின் சார்பில் ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் எனில், அனைத்து நாடுகளின் கருத்தை கேட்க வேண்டும். எனவே இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்கும் இந்தியாவுக்கு மிக முக்கிய அங்கீகாரம் கிடைக்கும்.
நிலைத்த வளர்ச்சி என்பது பிரிக்ஸ் நாடுகளின் மற்றொரு இலக்காகும். புதிய மாற்றங்களை ஏற்படுத்துவது, நவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவது, தொழில்துறையில் 4ம் கட்ட வளர்ச்சியை எட்டுவது, ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது மற்றும் அதற்கேற்ப தொழிலாளர் சக்தியை அதிகரிப்பது ஆகவற்றை பிரிக்ஸ் திட்டமிட்டிருக்கிறது. இதனை பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் அமல்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதுவும் இந்தியாவுக்கு பாசிட்டிவ் சைன்தான்.
இறுதியாக பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மிக முக்கியமான விஷயமாகும். உதாரணமாக சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்யப்பட வேண்டும் என்று ரஷ்யா திட்டமிட்டு வருகிறது. இது அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க பயன்படும் வழிமுறையாகும். மேற்குறிப்பிட்ட இரண்டு பாயிண்ட்களை விட இதுதான் இந்தியாவுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் சமீப காலமாக டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனால் நாம் அன்னிய செலாவணியில் கடுமையாக அடிவாங்கியிருக்கிறோம். இந்நிலைமையை சீராக்க ஒத்துழைப்பு அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications