Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொத்தமாக கைவிடப்படும் அமெரிக்க டாலர்! BRICS எழுச்சி தொடங்கியது.. இந்தியாவுக்கு விடிவுக்காலம்தான்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை போட்டு கிலியை கிளப்பிய அமெரிக்காவுக்கு, தற்போது பிரிக்ஸ் நாடுகள் பயம் காட்ட தொடங்கியுள்ளன. தங்கள் வசம் இருக்கும் டாலரை மொத்தமாக விற்பதன் மூலம் பிரிக்ஸ் ஆட்டத்தை ஆட ஆரம்பித்திருக்கிறது.

டாலர் மீதான மோகம் வெகுவாக குறைந்து வருகிறது என்று யூரிசோன் எஸ்எல்ஜே கேப்பிட்டல் எனும் முதலீட்டு நிறுவனத்தின் சிஇஓ ஸ்டீபன் ஜென் கூறியிருக்கிறார்.

BRICS US US dollar

அமெரிக்காவின் கடன்

அமெரிக்கா தற்போது கடன் பிரச்சனையில் சிக்கியிருக்கிறது. 2024ன்படி அந்நாட்டின் தேசிய கடன் $34 டிரில்லியனை தாண்டியிருக்கிறது. இது அந்நாட்டின் GDPயை விட 120%க்கும் அதிகமாகும். அதிக கடன் காரணமாக டாலர் மீதான மோகம் குறைந்திருக்கிறது. எனவே அதன் மதிப்பும் சரிவை சந்தித்திருக்கிறது. கடனை சமாளிக்க முடியும். ஆனால் அதற்காக வட்டி விகிதத்தை அமெரிக்க அதிகரிக்க வேண்டும். அப்படி நடந்தால் உலக பொருளாதாரம் மந்தமடையும்.

விழித்துக்கொண்ட பிரிக்ஸ்

அமெரிக்கா இதை செய்வதற்குள் பிரிக்ஸ் நாடுகள் தங்கள் வசம் இருக்கும் டாலரை சந்தைக்கு கொண்டு வந்திருக்கின்றன. மொத்தம் 2.5 டிரில்லியன் மதிப்பிலான டாலர் சந்தையில் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. சப்ளை குறைவாக இருந்தால்தான் டிமான்ட் அதிகமாக இருக்கும். ஆனால் டாலர் இந்த அளவுக்கு சந்தைக்கு வந்ததால் அதன் மீதான டிமான்ட் குறைந்திருக்கிறது. எனவே மதிப்பும் சரிய தொடங்கியுள்ளது. இது ஏதோ ஒன்றிரண்டு நாளில் நடந்தது கிடையாது.

டாலரின் சரிவு

புளூம்பெர்க் குறியீட்டின்படி, பிப்ரவரியிலிருந்து டாலர் 8% சரிவை சந்தித்திருக்கிறது. டாலருக்கு எதிராக ஆசிய நாணயங்கள் வலுப்பெற தொடங்கியுள்ளன. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகள் சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்து அதன் ருசியை கண்டுக்கொண்டன. எனவே டாலரை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள ரெடியாக இல்லை. சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்யும்போது, அந்தந்த நாடுகளின் கரன்சி வலுப்பெறுகிறது. உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கிறது.

உள்ளூர் நாணயங்களின் வளர்ச்சி

உள்ளூர் நாணயங்கள் மீது கடன் சுமை கிடையாது. அமெரிக்கா டாலருக்குதான் வானளவுக்கு கடன் இருக்கிறதே. இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் இப்போது வரை அமெரிக்க டாலரை பயன்படுத்திதான் கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறோம். இனி சொந்த காசில் எண்ணெய் வாங்கினால், பெட்ரோல் டீசல் விலை குறையும். அதேபோல இந்தியாவில் முதலீடுகள் அதிகரிக்கும். டாலரை விட ரூபாயில் முதலீடு செய்யவே பலரும் விரும்புகிறார்கள்.

இந்தியாவுக்கும் லாபம்

ரூபாயில் சர்வதேச வர்த்தகம் நடக்கிறது எனில் அது நமக்குதானே லாபம். அந்நிய செலவானி என்கிற தலைவலி இனி நமக்கு இருக்காது. எனவேதான் சீனா கூட டாலரை தவிர்த்து தங்களது சொந்த நாணயத்தை வைத்து வணிகம் செய்து வருகிறது.

இந்தியாவின் எதிர்காலம்

இருப்பினும் டாலரின் மதிப்பு சரிந்தால் அது உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். வர்த்தக சந்தைகள் களேபரமாக மாறக்கூடும். அதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குதான். பிறகு மீண்டும் வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பும். எனவே இந்தியாவும் டாலரை தவிர்த்து பிரிக்ஸ் கரன்சி பக்கம் நகர்தல் வேண்டும். பிரிக்ஸ் கரன்சி உருவாக லேட் ஆகும் எனில், சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய ரெடியாக இருக்க வேண்டும். போருக்கு நடுவில் நம்மால் டாலரையும் கட்டிக்கொண்டு அழ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+