For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணி எலிசபெத்தை சந்திக்க வாங்க.. ட்ரம்ப்புக்காக சிவப்பு கம்பளத்தோடு காத்திருக்கிறது இங்கிலாந்து

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் டொல்னால்டு ட்ரம்புக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத்தை சந்திக்க வருமாறு அழைப்பு விடுக்க அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

லண்டன்: அமெரிக்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்புடன் நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு ராணி எலிசபெத்தை சந்திக்க வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்க இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் அமெரிக்காவின் 45-வது புதிய அதிபராக தேரந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம் வரும் 2017-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இங்கிலாந்தாக இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.

Britain plans to invite Trump to meet the Queen

அதன்படி இங்கிலாந்து ராணி எலிசபெத்தை வரும் கோடை காலத்தில் சந்திக்க வருமாறு ட்ரம்புக்கு அழைப்பு விடுக்க இங்கிலாந்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவருக்கு சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்காக இங்கிலாந்து அதிகாரிகள் குழு அமெரிக்க அதிகாரிகளிடம் விரைவில் பேச்சு நடத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

வரும் 2017-ம் ஆண்டு ஜுன் அல்லது ஜுலை மாதத்தில் டொனால்டு ட்ரம்பை இங்கிலாந்துக்கு வரவழைக்க அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக விரைவில் அமெரிக்க அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் டொனால்டு ட்ரம்ப் இங்கிலாந்து சுற்றுப்பயண தேதி உள்ளிட்ட பிற விவரங்கள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்டு ட்ரம்புக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் அலுவல் ரீதியாக பாராட்டு அனுப்பினார்.

மேலும், இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப் பூர்வமாக வெளியேறும் நாளைக் காண தாம் ஆவலுடன் காத்திருப்பதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், தனது தாயார் இங்கிலாந்து ராணி எலிசபெத் மீது அதிக அன்பு கொண்டிருந்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

English summary
London: British officials are planning to invite Donald Trump to meet the Queen Elizabeth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X