கிரிக்கெட் விளையாட்டில் தொடரும் சோகம்.. இங்கிலாந்தில் பந்து தாக்கி இந்திய வம்சாவளி வீரர் பலி மரணம்..
லண்டன் : கிரிக்கெட் விளையாட்டின் போது, பந்து தாக்கி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வீரர் பலியான சம்பவம் விளையாட்டுத் துறையில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் தமிழ் லீக் 3-வது டிவிஷன் என்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் விளையாடிய இந்திய வம்சாவளி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த பாவலன் பத்மநாதன் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எதிரணி பவுலர் வீசிய பந்து பாவலன் நெஞ்சில் பலமாக தாக்கியது.

வலியால் துடித்த பாவலன் முதலில்தன் நன்றாக இருப்பதாக கையால் சைகை காட்டினார். ஆனால் சில அடி தூரம் நடந்த அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி 24 வயதான பாவலன் உயிர் பிரிந்தது. இந்த துயர சம்பவத்துக்கு அவர் விளையாடிய கிளப் உள்பட பல்வேறு கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது பவுன்சர் பந்து கழுத்தில் தாக்கியதில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் பரிதாபமாக பலியானார்.
உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் முழுவதும் மறையும் முன்பே கடந்த ஏப்ரல் மாதத்தில் பெங்கால் அணியின் பேட்ஸ்மேன் அங்கீத் கேஸ்ரி பீல்டிங் செய்யும் போது சக வீரருடன் கவனக்குறைவாக மோதியதில் தலையில் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
கிரிக்கெட் உலகில் இது போன்று அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் பெரும் அதிர்ச்சியையும், கிரிக்கெட் விளையாட்டின் பாதுகாப்பு குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications