இந்தியர்களை மீட்க.. காபூலில் களமிறங்கியது "குளோப்மாஸ்டர்" விமானம்.. ஏர் போர்ஸின் திரில் ஆபரேஷன்!

Subscribe to Oneindia Tamil

காபூல்: காபூலில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மீட்பு விமானம் தரையிறங்கி உள்ளது. இந்திய விமானப்படையின் குளோப்மாஸ்டர் C17 ரக போர் விமானம் மீட்பு பணிக்காக காபூல் சென்றுள்ளது. அங்கு இருக்கும் இந்திய மக்கள், தூதரக அதிகாரிகள் இதன் மூலம் மீட்கப்படுவார்கள்.

ஆப்கானிஸ்தானில் நடந்த 20 வருட போரின் முடிவில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான் வசம் சென்றுள்ளது. நேற்றுதான் காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது. எந்த மோதலும் இன்றி எளிதாக தாலிபான் காபூலை கைப்பற்றியது. இதையடுத்து ஆப்கான் அதிபராக அஷ்ரப் கானி பதவி விலகுவதாக அறிவித்தார். அதோடு அவர் தஜிகிஸ்தான் நாட்டிற்கும் தப்பி சென்றார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்க உள்ளதால் அங்கு இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். தாலிபான்கள் ஆட்சிக்கு கீழ் கொடுமைகளை அனுபவிக்க விருப்பம் இன்றி ஆப்கானிஸ்தான் மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையமே போர்க்களமாக மாறி உள்ளது.

பயணிகள் விமானம் தடை

பயணிகள் விமானம் தடை

ஆப்கானிஸ்தானை கட்டுக்குள் கொண்டு வந்த தாலிபான்கள் பயணிகள் விமானம் பறக்க ஆப்கானிஸ்தானுக்குள் தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மக்கள் வெளியேறுவதை தடுக்கும் வகையில் பயணிகள் விமானம் இயங்க கூடாது என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது. இதற்காக ஆப்கானிஸ்தான் வான் பகுதி கட்டுப்பாடு இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஒவ்வொரு நாட்டு விமானப்படை விமானங்கள் மட்டும் காபூலில் மீட்பு பணிகளை செய்து வருகிறது. அமெரிக்க படைகள் காபூல் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பிற்கு கீழ் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போர் விமானங்கள் மக்களை அங்கிருந்து மீட்டு கொண்டு செல்கிறது. பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகளும் இப்படி விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

ஏர் இந்தியா விமானம் இயங்கவில்லை

ஏர் இந்தியா விமானம் இயங்கவில்லை

இந்தியாவும் ஆப்கானிஸ்தானுக்கு ஏர் இந்தியா விமானத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர்களின் விமானப்பகுதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இன்று காலை செல்வதாக இருந்த ஏர் இந்தியா விமானம் பிற்பகலுக்கு தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின் மொத்தமாக பயணிகள் விமானம் பறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் ஏர் இந்தியா விமானம் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. முன்னதாக நேற்று ஆப்கானிஸ்தானுக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது.

திக் திக்

திக் திக்

அப்போது ஏர் இந்தியா விமானம் இறங்குவதற்கு முன் சரியாக காபூலை தாலிபான்கள் பிடித்தனர். இதனால் விமான நிலையத்தில் இருக்க வேண்டிய அதிகாரிகள் பலர் வெளியேறினார்கள். ஏர் டிராபிக் கண்ட்ரோலரும் அங்கிருந்து வெளியேறினார்கள். இதனால் ஏர் இந்தியா விமானம் என்ன செய்வது என்று தெரியாமல் காபூலுக்கு மேலே 1 மணி நேரம் சுற்றி இருக்கிறது. அதன்பின் ஒரு வழியாக 1 மணி நேரம் கழித்து லேண்டிங் கிளியர் செய்யப்பட்டு ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது. அதேபோல் மீண்டும் இன்னொரு சம்பவம் நடந்து விட கூடாது என்பதால் ஏர் இந்தியா விமானம் இன்று மொத்தமாக ரத்து செய்யப்பட்டது.

 ராணுவ விமானம் சென்றுள்ளது

ராணுவ விமானம் சென்றுள்ளது

இதனால் இன்று இந்தியா சார்பாக இந்திய விமானப்படை விமானம் காபூல் சென்றுள்ளது. பயணிகள் விமானம் மட்டுமே பறக்க தடை விமானப்படை மீட்பு விமானங்கள் பறக்க தடை கிடையாது. இதனால் காபூலில் சிக்கியுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இந்திய மக்களை மீட்க இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானம் களமிறக்கப்பட்டுள்ளது. போர் விமானமான குளோப்மாஸ்டர் C17 உள்ளே பொதுவாக பலர் பயணிக்க முடியும். ஹெவி வெயிட் விமானம் என்பதால் எளிதாக பலரை மீட்டு கொண்டு வர முடியும். இந்தியா பொதுவாக ராணுவ மீட்பு பணிகளுக்கு இந்த விமானத்தை பயன்படுத்தும். இதனால் தற்போது காபூல் மீட்பு பணிகளுக்கும் இந்தியா இதே குளோப்மாஸ்டர் விமானத்தை களமிறக்கி உள்ளது.

Recommended Video

    நாட்டை விட்டு தப்பிக்க அலைமோதும் கூட்டம்.. Afghanistan விமான நிலையத்தில் பரபரப்பு
    திக் திக் ஆபரேஷன்

    திக் திக் ஆபரேஷன்

    இந்த மொத்த ஆபரேஷனும் கொஞ்சமும் திகிலூட்ட கூடியது தான். ஏனென்றால் முதலில் 200க்கும் அதிகமான இந்திய தூதரக அதிகாரிகள், மக்கள், பாதுகாப்பு அதிகாரிகளை பல்வேறு இடங்களில் இருந்து விமான நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும். இவர்கள் வேறு வேறு இடங்களில் வசிக்கிறார்கள். ஜீப்கள் மூலம், தாலிபான்களின் அச்சுறுத்தலுக்கு இடையே இவர்களை பாதுகாப்பாக விமான நிலையம் கொண்டு வர வேண்டும். அதன்பின் அவர்களை பாதுகாப்பாக விமானத்தில் ஏற்ற வேண்டும். ஏற்கனவே விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் கூட்டமாக இருப்பதால் அவர்களுக்கு இடையில் பாதுகாப்பாக இவர்களை விமானத்தில் ஏற்ற வேண்டும். இதுவே மிகப்பெரிய டேரிங் ஆப்ரேஷன் போலத்தான் இருக்கும்.

    பாகிஸ்தான் இல்லை

    பாகிஸ்தான் இல்லை

    இது போக இந்திய விமானப்படையின் இந்த விமானம் பாகிஸ்தானுக்கு மேல் பறக்க முடியாது. பாகிஸ்தான் இதற்கு அனுமதி தரவில்லை. ஏற்கனவே கடந்த மாதம் நடந்த கந்தகார் தூதரக மீட்பு பணிக்கே பாகிஸ்தான் அனுமதி தரவில்லை. அப்போதே இந்தியா ஈரான் வழியாக சுற்றி சென்றது. இதனால் இன்றும் இந்திய விமானப்படை விமானம் ஈரான் வழியாக சுற்றி இந்தியாவிற்கு வர வேண்டும். விமானம் அங்கே தரையிறங்கிவிட்ட நிலையில் விரைவில் இந்தியர்களைமீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+