For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டுக்குள் சிக்கிய வேட்டைக்காரர்... 19 நாட்களாக அணில், பாம்பு, பல்லியை சாப்பிட்ட விநோதம்

Google Oneindia Tamil News

லிபோர்னியா: காட்டுக்குள் சிக்கிய அமெரிக்க வேட்டைக்காரர் ஒருவர் கிட்டத்தட்ட 19 நாட்கள் பல்லி, பாம்பு மற்றும் அணில்களைச் சாப்பிட்டு வாழ்க்கையை ஓட்டியுள்ளார்.

ஆதிகாலத்தில் மனிதன் சமைத்து சாப்பிடப் பழகுவதற்கு முன், வேட்டையாடிய மாமிசங்களைப் பச்சையாக சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளான் . ஆனால், இன்றோ சமைக்காத மாமிசங்களை உண்பது ஆரோக்கியமானதல்ல என்ற மனநிலையில் வாழ்கிறான்.

ஆனபோதும், சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை வளைத்து வாழும் திறமை கொண்டசந்தர்ப்பவாதி, மனிதன் என்பதற்கு இச்சம்பவமே மிகச்சிறந்த உதாரணம்.

வேட்டைக்காரர்....

வேட்டைக்காரர்....

கலிபோர்னியாவில் உள்ள சான்பிரான்சிஸ்கோவை சேர்ந்த ஜெனி பெனாப்ளோர் என்ற வேட்டைக்காரர் கடந்த மாதம் மென்டோசினோவில் உள்ள நேஷனல் வனப் பகுதிக்கு தனது நண்பருடன் வேட்டைக்கு சென்றார்.

வேட்டை....

வேட்டை....

நண்பர்கள் தனித்தனியே பிரிந்து வனப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தலையில் அடிபட்டு மயக்கமடைந்துள்ளார் ஜெனி.

தடம் மாறிய பயணம்....

தடம் மாறிய பயணம்....

மயக்கம் தெளிந்து பார்த்தபோது இரவாகி விட, காட்டிலேயே தங்கிவிட்டாராம் ஜெனி. மறுநாள் வீடு திரும்ப முயற்சித்த ஜெனி பாதை தவறி காட்டின் நடுப்பகுதிக்கு சென்று விட்டாராம்.

பல்லி...பாம்பு...அணில்

பல்லி...பாம்பு...அணில்

காட்டுக்குள் கிட்டத்தட்ட 19 நாட்கள் சுற்றி திரிந்த ஜெனி, பசித்த போது கையில் கிடைத்த பாம்பு, பல்லி மற்றும் அணில்களை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை சாப்பிட்டு உயிர் வாழ்ந்துள்ளார்.

சைவ வாழ்க்கை....

சைவ வாழ்க்கை....

சில சமயங்களில் காட்டில் கிடைத்த பழங்களை தின்றும், ஆற்று நீரை குடித்தும் சைவ வாழ்க்கை வாழ்ந்துள்ளார் ஜெனி.

உதவி கிட்டவில்லை...

உதவி கிட்டவில்லை...

இந்நிலையில், ஒருநாள் காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் பறப்பதை பார்த்த ஜெனி, அவர்களிடம் உதவி கேட்க புகை மூலம் சிக்னல் கொடுத்துள்ளார். ஆனால், யாரும் அதை கவனிக்கவில்லையாம்.

துப்பறியும் நிபுணர் குழு...

துப்பறியும் நிபுணர் குழு...

இதற்கிடையே வனப்பகுதிக்குள் மாயமான அவரை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். கஷ்டப்பட்டு அலைந்து திரிந்து 19 நாட்களுக்கு பிறகு அவரை மீட்டுள்ளனர் அவர்கள்.

சிகிச்சை...

சிகிச்சை...

உடல்நலம் பாதித்த நிலையில் மிகவும் பரிதாபமாக இருந்த ஜெனி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். தற்போது அவருக்கு உகியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English summary
A 72-year-old California man is recovering after he was found alive Saturday after spending nearly three weeks lost alone in the woods. Gene Penaflor was finally reunited with his family Saturday, hours after he was spotted in the wilderness of northern California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X