For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருடிய பணத்தை திருப்பிக் கொடுத்த ஆச்சரிய திருடன்- கலிபோர்னியா விநோதம்!

Google Oneindia Tamil News

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் 23 வயதான இளம் வயது திருடன் ஒருவர் மனம் திருந்தி தான் திருடிய பணத்தினைத் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திற்கு சென்ற சைல் வாரென் என்னும் இளைஞர் அங்கு இருந்த ஊழியரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் மற்றும் இரு பீர் பாட்டில்களை திருடிச் சென்றார்.

இச்சம்பவம் நடந்து சுமார் 3 மணி நேரம் கழித்து அதே எரிவாயு நிலையத்திற்கு திரும்பி வந்த சைல் வாரென், திருடிய பணத்தை திருப்பி கொடுத்து மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரணை செய்த போது, ஒரு புதிய வாழ்வை துவங்க தனக்கு பணம் தேவைப்பட்டதாக சைல் வாரென் கூறினார். ஆனால், மனசாட்சி உறுத்தியதால் பணத்தை திருப்பி அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.

English summary
A guilty conscience can really nag on someone, and it appears that is exactly what happened to California man Cyle Warren Abbott, Jr. The 23-year-old has experienced a bumpy life, he was arrested three years ago for possession of narcotics and a DUI.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X