பத்துமாத குழந்தையின் தாய் மீது ஆசை... மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்ட வெறியன்
கலிபோர்னியா: உலகம் முழுவதும் நடக்கும் கொலைகளுக்குக் காரணம் மண்ணாசை பொன்னாசையும், பெண்ணாசையும் தான் சமீபகாலமாக கள்ளக்காதல் கொலைகள் அதிகரித்து வருகின்றன. கலிபோர்னியாவில் காம ஆசைக்கு ஆட்பட்ட ஒருவன், பத்து மாத குழந்தைக்கு தாயான பெண்ணை தவறான உறவுக்கு அழைத்திருக்கிறான். தவறான ஆசைக்கு மறுத்த அந்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். இதில் அந்த பச்சிளம் குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.
துப்பாக்கியால் சுட்ட அந்த படுபாதகனின் பெயர் மார்கோஸ் எசார்டி என்பதாகும். பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் டெஸிரி மேனாக். 18 வயதான அந்த இளம் பெண் கடந்த வாரம் தனது பத்துமாத குழந்தையோடு பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

அங்கே நண்பர்களுடன் மார்கோஸ் எசார்டியும் வந்திருந்தான். டெஸிரியை பார்த்த உடன் அவள் மீது ஆசைப்பட்டு கையை பிடித்து இழுத்தான். அவனது தொடுகை டெஸிரிக்கு அருவெறுப்பாக இருக்கவே கையை உதறிக்கொண்டு அவனைப் பிடித்து திட்டினாள். ஆனாலும் விடாத எசார்ட்டி தகாத முறையில் நடந்து கொண்டான். வலுக்கட்டாயமாக இழுத்து அணைக்க முயற்சி செய்தான்.
அவனை தள்ளிவிட்டு விட்டு தனது குழந்தையோடு நண்பரின் காரில் ஏறி புறப்பட்டாள். அந்த காரை பின்தொடர்ந்து சென்ற எசார்ட்டி தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டான். இதில் துப்பாக்கிக்குண்டு காருக்குள் இருந்த பத்துமாத குழந்தையின் மீது பாய்ந்தது. கார் டிரைவர் வேகமாக காரை ஓட்டிக்கொண்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று குழந்தையை சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தலையில் பாய்ந்திருந்த துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது என்றாலும் அந்த பச்சிளம் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. குழந்தை மீது துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வெறியன் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியின்றி மீது பார்ட்டியில் பங்கேற்கச் சென்று விட்டான்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கலிபோர்னியா மாகாண போலீசார் எசார்ட்டி மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
டிசிஎஸ் தொடர்ந்து விப்ரோ.. பாலியல் அச்சுறுத்தல், உடலுறவு, மதமாற்றம்.. பெண் ஐடி ஊழியரின் பகீர் புகார்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications