வந்தாச்சு பசும்பால் அலர்ஜிக்கு மாற்று... குழந்தைகளுக்கான ஒட்டகப்பால் பவுடர் ‘கேமலிசியஸ்’ அறிமுகம்!
துபாய் நிறுவனம் சிறு குழந்தைகளுக்கான ஒட்டகப்பால் பவுடரை அறிமுகப்படுத்தியுள்ளது.
துபாய்: துபாயில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒன்று முதல் மூன்று குழந்தைகளுக்கான பால் பவுடர் விற்பனைக்கு வந்துள்ளது.
துபாயில் இந்தாண்டிற்கான உணவுக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 'கேமலிசியஸ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள ஒட்டகப்பால் பவுடர் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

ஒரு வயது முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்தப் பாலைக் கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. பசும்பாலில் இருப்பதைவிட அதிகளவு வைட்டமின் சி இந்தப் பாலில் இருப்பதாக அதன் விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பசும்பால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மாற்றாக, இந்தப் பால் நல்ல சத்துத் தருவதாக அமையும் என கேமலிசியஸ் நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.
ஹாலந்து பால் பவுடர் நிறுவனத்துடன் சேர்ந்து துபாய் நிறுவனம் இந்த கேமலிசியஸ் பவுடரைத் தயாரித்துள்ளது. ஒட்டகப் பால் ஏற்கனவே பல இடங்களில் விற்பனையில் உள்ள நிலையில், ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்படும் முதல் பால் பவுடர் என்ற சிறப்பை இந்த கேமலிசியஸ் பெற்றுள்ளது.
துபாயில் விற்பனைக்கு வந்துள்ள இந்தப் பால் பவுடரை அடுத்த கட்டமாக ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய கேமலிசியஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications