குழந்தைகளுக்கு காது குத்தாதீங்க - இங்கிலாந்தில் ஒரு நூதனப் பிரசாரம்!!
லண்டன்: காது குத்துதல் என்பது தமிழகத்தினைப் பொறுத்த வரையில் மிக முக்கிய சடங்காக கருதப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.
அறிவியல் ரீதியாகவும் காதில் இடப்படும் ஓட்டை உடல் உறுப்புகளுக்கும் நல்லது என்ற கருத்தும் உண்டு.
ஆனால், இங்கிலாந்திலோ குழந்தைகளுக்கு காது குத்துவதைத் தவிர்க்ககோரி ஒரு பெண்மணி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

காது குத்தக் கூடாது:
இங்கிலாந்தில், சூசன் இங்க்ரம் என்ற பெண் ஒரு ஆன்லைன் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்கு காது குத்துவதை எதிர்த்து இந்த ஆன்லைன் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டுள்ளார். அதில் ஆன்லைன் மனுவும் இணைக்கப்படடுள்ளது.

குழந்தைகளைக் கொடுமை படுத்துகின்றோம்:
இதுகுறித்த அவர் கூறுகையில், "இது சிறார்களை கொடுமைப்படுத்தும் செயல். காதுகளைக் குத்தும்போது கடும் வலி ஏற்படும். குழந்தைகள் மனதில் பயம் ஏற்படும்.

பெற்றோர்களின் ஆசை:
தேவையில்லாமல் அவர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். பெற்றோர்களின் ஆசைக்காக பிள்ளைகளை சிரமப்படுத்துவது தவறு. உடல் ரீதியான சித்திரவதையான இதை தடை செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

குவியும் ஆதரவு:
இந்த பெட்டிஷனுக்கு இதுவரை 24,558 பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர். இன்னும் 25,000 கையெழுத்துகள் சேர்ந்தால் அதை சிறார் நலத்துறை அமைச்சர் எட்வர்ட் டிம்ப்சனிடம் அனுப்பவுள்ளார் சூசன்.












Click it and Unblock the Notifications