எங்கு தங்கினீர்கள்.. சாரி சொல்ல முடியாது.. சொந்த தகவலை கூட வெளியிட பயந்த மார்க் ஜூக்கர்பெர்க்
அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க கூட அவர் பயந்து இருக்கிறார்.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் விசாரணை
பேஸ்புக் தகவல் திருட்டு குறித்து அதன் நிறுவனர் மார்க் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது மார்க் தான் செய்த குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டார். அதோடு மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.

என்ன விஷயங்கள் செய்தீர்கள்
இந்த விசாரணையில் மார்க்கிடம் நிறைய வித்தியாமான கேள்விகள் கேட்கப்பட்டது. அவரை விசாரித்த டிக் டுர்பின் பேஸ்புக் திருட்டு குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டார். பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவல்கள் தேர்தலில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதா இல்லை வேறு விஷயங்கள் எதிலும் கூட பயன்படுத்தினீர்களா?'' என்று கேள்வி எழுப்பினார்.

எல்லோருக்கும் உரிமை இருக்கிறது
இதற்கு பதிலளித்த மார்க் ''பொதுவாக பேஸ்புக்கில் என்ன கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க கூடாது என்பதை தேர்வு செய்ய மக்களுக்கு உரிமை இருக்கிறது. மக்கள் கொடுக்கும் தகவலை கட்டுப்படுத்த அவர்கள் நினைத்தால் முடியும். இதில் நாங்கள் அவர்கள் தகவலை கட்டாயப்படுத்தி திருடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சொந்தம்
இதில் பல கேள்விகளுக்கு மார்க் சரியாக பதில் சொல்லவில்லை. முக்கியமாக அவரை குறித்து தனிப்பட்ட விவரங்களை கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். நேற்று எந்த ஹோட்டலில் தங்கி இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, நீண்ட நேரம் யோசித்துவிட்டு, ''ஹான், ம்ம்ம். சொல்ல முடியாது'' என்று மறுத்துவிட்டார். தன்னுடைய சொந்த விவரத்தை வெளியிட அதிகம் பயப்படும் ஒருவர்தான், இப்படி மக்களின் தகவலை திருடி இருக்கிறார் என்று எல்லோரும் பேசி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications