ஈரான் விமான விபத்து சந்தேகம் தருகிறது.. களமிறங்கினார் ஜஸ்டின் ட்ரூடோ.. விசாரணை செய்யும் கனடா!
ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈரானில் நேற்று உக்ரைன் விமானம் வெடித்து சிதறி கீழே விழுந்தது வெறும் விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று உக்ரைன் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலால் இந்த விமானம் விழுந்து இருக்கலாம் சந்தேகிக்கப்படுகிறது.
ஈரான் அமெரிக்கா இடையில் தற்போது போர் உண்டாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகள் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானது.
விமானத்தில் பயணித்த 170 பேரும் பலியானார்கள். டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 -800 விமானம் புறப்பட்டது. இந்த விமானம் உக்ரைன் அரசுக்கு சொந்தமான உக்ரைனியன் சர்வதேச ஏர்லைனர் விமானம் ஆகும்.

என்ன சந்தேகம்
ஈரானில் உக்ரைன் விமானம் இப்படி விழுந்து நொறுங்கியது குறித்து பல நாடுகள் சந்தேகம் எழுப்ப தொடங்கி உள்ளது. இது தொடர்பாக முதலில் உக்ரைன் நாடுதான் சந்தேகம் தெரிவித்தது. ஈரான் செலுத்திய ஏவுகணை காரணமாக எங்கள் விமானம் விழுந்து இருக்கலாம் என்று கூறியது.

அதே நேரம்
ஈரான் ராக்கெட்டை ஏவிய அதே நேரத்தில்தான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இரண்டும் ஒரே நேரத்தில் நடந்தது சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதனால் ஈரான் அனுப்பிய ராக்கெட் மோதி, இந்த விமானம் விழுந்து இருக்கலாம் என்று பலரும் கூறினார்கள்.

யார் சொன்னார்கள்
உக்ரைனை தொடர்ந்து பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இதே சந்தேகத்தை எழுப்பியது. நேற்று அமெரிக்கா அதிபர் டிரம்பும் இதை பற்றி.குறிப்பிட்டார். உக்ரைன் விமானம் விபத்துக்கு உள்ளானது போல தெரியவில்லை. இதற்கு பின்னால் எதோ தவறு நடந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

என்ன உதவி
இந்த விமான விபத்து தொடர்பாக தற்போது உக்ரைன் அரசு, கனடாவின் உதவியை நாட உள்ளது. பொதுவாக விமான விபத்து தொடர்பான ஆராய்ச்சிகள், விசாரணைகளை கனடா அரசுதான் அதிகமாக நடத்தும். அவர்களிடன் இதில் பலர் தொழில்நுட்ப பிரிவினர் உள்ளனர். அதனால் கனடா அரசிடம் உதவி கேட்க உக்ரைன் முடிவு செய்துள்ளது.

என்ன கூறினார்
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எங்களுக்கு இந்த விபத்து தொடர்பாக சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரிப்போம். இதற்காக எங்கள் நிபுணர் குழுவை அனுப்ப உள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் உக்ரைன் விமான விபத்து பெரிய பிரச்சனையாக தொடங்கி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications