For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கருக்கு இப்படி ஒரு மரணமா?

By Siva
Google Oneindia Tamil News

மணிலா: வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் ஹெக் பிலிப்பைன்ஸில் தனது 84வது வயதில் ஆதரவற்ற ஏழையாக இறந்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ஹெக். அவருக்கு கடந்த 2010ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை அவர் ஜப்பானைச் சேர்ந்த எய்-இச்சி நெகிஷி மற்றும் அகிரா சுசுகி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார். அந்த மூன்று பேர் கார்பன் அணுக்களை ஒன்று சேர்க்க புதிய முறையை கண்டுபிடித்தனர். அந்த முறை புற்றுநோய் ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

Chemistry Nobel laureate Richard Heck dies a pauper

2006ம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ரிச்சர்ட் தனது மனைவி சொகோரோ நார்டாஹெக்கின் தாய் நாடான பிலிப்பைன்ஸில் செட்டில் ஆனார். சொகோரோ கடந்த 2012ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து சொகோரோவின் உறவினரான மைக்கேல் நார்டோ ரிச்சர்ட்டை கவனித்து வந்தார்.

ரிச்சர்ட்டுக்கு குழந்தை இல்லை. மைக்கேல் அவரை இரண்டு நர்ஸ்கள் வைத்து கவனித்து வந்தார். இந்நிலையில் திடீர் என்று ரிச்சர்டின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது ஏற்கனவே உள்ள பாக்கியை செலுத்துமாறு கூறி அவரை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் அவர் சிகிச்சை பெற முடியாமல் சனிக்கிழமை பரிதாபமான நிலையில் உயிர் இழந்தார்.

English summary
Richard Heck who won nobel prize for chemistry in 2010 died like a pauper in Philippines on saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X