ஷாக்! ரஷ்யா கைப்பற்றிய மறுநாளே.. செர்னோபில் அணு உலையிலிருந்து திடீர் கதிர்வீச்சு! உக்ரைனில் பரபரப்பு
மாஸ்கோ: உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த செர்னோபில் பகுதியை ரஷ்யா கைப்பற்றிய மறுநாளே செர்னோபில் அணு உலையிலிருந்து வரும் கதிர்வீச்சு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணு உலையை ரஷ்யா கைப்பற்றிய நிலையில் உக்ரைன் அணுசக்தி நிறுவனம் இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் வெடித்து சிதறிய செர்னோபில் அணு உலையை நேற்று ரஷ்யா மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.
செர்னோபில் அணு உலை 1986ல் ஏப்ரல் மாதம் வெடித்து சிதறியது. அந்த அணு உலையில் செய்யப்பட்ட சோதனை ஒன்றின் போது திடீரென செர்னோபில் அணு உலையின் மின்சார உற்பத்தி நின்று போய், பின்னர் அணு உலை வெடிப்பிற்கு அது காரணமாக அமைந்தது.

செர்னோபில்
அணு உலையின் கூலண்ட் வேலை செய்யாமல் போனதும் வெடிப்பு பெரிதாக காரணமாக அமைந்தது.உலக வரலாற்றில் இது மிகப்பெரிய அணு உலை விபத்து என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு இருக்கும் ரியாக்டர் 4தான் இப்படி வெடித்து சிதறியது. உக்ரைனில் பிரிப்யாட் என்ற பகுதியில் இந்த வெடிப்பு சம்பவம் நடந்தது. ரஷ்யா, உக்ரைன் எல்லாம் அப்போது ஒன்றாக சோவியத் யூனியனுக்கு கீழ் இருந்தது. இந்த விபத்தின் ஆபத்து விகிதம் 7 என்று குறிக்கப்பட்டது.

அணு உலை
இதுதான் அணு உலை வெடிப்புகளில் குறிப்பிடப்படும் அதிகபட்ச ஆபத்து விகிதம் ஆகும். இந்த விபத்தில் 100 பேர் நேரடியாக மரணம் அடைந்தனர். கேன்சர் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் மூலம் இந்த செர்னோபில் விபத்தில் 96 ஆயிரம் பேர் வரை மடிந்தனர். இப்போது இந்த செர்னோபில் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் செர்னோபில் வெடித்த வாரத்திலேயே அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வெடித்த அணு உலை
இந்த நிலையில் 1986ல் செர்னோபில் அணு உலையை சுற்றி மிகப்பெரிய சுவர் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அணு கசிவு தடுக்கப்பட்டது. ஆனால் இதுவும் சேதம் அடைந்த நிலையில் 2017ல் மீண்டும் உக்ரைன் அரசு மூலம் இங்கு இன்னொரு சுவர் அமைக்கப்பட்டது. தற்போது அங்கு அணுக்கசிவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இன்னும் முழுமையாக அணுக்கசிவு நிற்கவில்லை. அங்கு மண்ணிலும், காற்றிலும் அணு கசிவு இருந்து கொண்டு இருக்கிறது.

ரஷ்யா தீவிரம்
இந்த நிலையில்தான் உக்ரைனில் ரஷ்யா தீவிரமாக நுழைந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. நேற்று காலை தாக்குதல் தொடங்கிய நிலையில் இன்று மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. உக்ரைனை கடல், வானம், தரை என்று மூன்று பக்கத்திலும் இருந்தும் தாக்கி வருகிறது. நேற்றுதான் ரஷ்யாவின் படைகள் செர்னோபில் பகுதியை கைப்பற்றியது. அங்கு பெரிய அளவில் ராணுவ வீரர்கள் இல்லாத நிலையில் ரஷ்ய ராணுவம் டாங்கிகளோடு புகுந்து தாக்குதல்களை நடத்தியது.

கட்டுப்பாடு
தற்போது அணு உலை வெடித்த பகுதி ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இந்த நிலையில் உக்ரைனின் கட்டுப்பாட்டிலிருந்த செர்னோபில் பகுதியை ரஷ்யா கைப்பற்றிய மறுநாளே செர்னோபில் அணு உலையிலிருந்து வரும் கதிர்வீச்சு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எப்போதும் இருக்கும் காமா ரேடியேஷன் அளவை விட இது அதிகமாக இருப்பதாகவும். இதனால் இரண்டு நாட்டு மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் உக்ரைன் நாட்டின் அணு சக்தி துறை இயக்குனர் தெரிவித்து இருக்கிறார்.

போர்
இங்கு ராணுவ வீரர்கள் வேகமாக சென்றனர். ராணுவ வாகனங்கள் சென்றது. இதனால் மண்ணில் இருந்த கதிர்வீச்சு காற்றில் கலந்து இருக்கும். இதனால் அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டு அதிகம் ஆகி இருக்கலாம். அணு கதிர்வீச்சு பாதிக்கப்பட்ட துகள்கள் காற்றில் பரவி இருக்கலாம் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளனர். எது நடக்க கூடாது என்று நினைத்தோமோ அது நடந்துவிட்டது, இங்கு கதிர்வீச்சு ஏற்பட்டால் அது பல கோடி மக்களை பாதிக்கும் என்று உலக சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video

மறுப்பு
ஆனால் ரஷ்யா இதை மறுத்துள்ளது. அப்படி அணுகதிவீச்சு எதுவும் நடக்கவில்லை. இந்த அணு உலையை நாங்கள் பாதுகாப்பதே சரியாக இருக்கும். நாங்கள்தான் இதற்கு சரியான பாதுகாப்பு வழங்க முடியும். உக்ரைன் மூலம் இந்த பகுதிக்கு சரியான பாதுகாப்பு வழங்க முடியாது என்று ரஷ்யா விளக்கம் அளித்துள்ளது. இந்த செர்னோபில் உலையால் ஒருவிதமான பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications