சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு
சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது
சாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது... இது ரிக்டர் அளவுகோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது.
தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இங்குள்ள மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே பகுதியில் சில தினங்களுக்கு முன்புகூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில், இன்று இரவு 8:23 மணியளவில் சிலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.. இது ரிக்டர் அளவு கோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
சில நிமிடங்கள் நீடித்த அந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.. இதனால் அச்சம் கொண்ட மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த பகுதியில் உள்ள மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டன.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. அதே சமயத்தில் பெரிய அளவில் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதும் உடனடியாக தெரியவில்லை.
சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவுமில்லை. சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் உள்ளது.. இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications