Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.43,000க்கு பதில்.. 300 மடங்கு அதிக சம்பளம் அனுப்பிய நிறுவனம்! ஊழியரே வைத்துகொள்ள கோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சிலி: சிலி நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தவறுதலாக உதவியாளர் ஒருவருக்கு மாதம் ரூ.43 ஆயிரம் சம்பளம் வழங்குவதற்கு பதில் 300 மடங்கு அதிகமான சம்பளத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பியது. இந்த பணம் வந்த 3 நாளில் அந்த உதவியாளர் ராஜினாமா செய்துவிட்டு எஸ்கேப் ஆனார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்து நீதிமன்றம் போட்ட உத்தரவு உதவியாளருக்கு சாதகமாக மாறி உள்ளது. என்ன நடந்தது? என்று இங்கு பார்க்கலாம்.

சிலி நாட்டில் டான் கன்சோர்சியோ இண்டஸ்ட்ரியல் டி அலிமென்டோஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் இறைச்சி உள்பட பிற உணவுப்பொருட்களை விற்பனை செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

chile-man-gets-300-times-his-salary-rs-1-42-crore-instead-of-rs-43-000-by-mistake-and-wins-legal-rig
Photo Credit:

இந்த நிறுவனத்தில் உதவியாளராக ஒருவர் பணியாற்றி வந்தார்.அவருக்கு மாதம் 386 யூரோ சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது. இந்திய மதிப்பில் மாதம் அவர் ரூ.43 ஆயிரத்தை சம்பளமாக பெற்று வந்தார்.

கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் நிறுவனத்தில் இருந்து சம்பளம் விடுவிக்கப்பட்டது. அப்போது தவறுதலாக உதவியாளருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டது. அவருக்கு மாதம் 386 யூரோ சம்பளமாக வழங்க வேண்டும். ஆனால் நிறுவனத்தில் இருந்து அவருக்கு 300 மடங்கு அதிகமாக 1,27,000 யூரோ சம்பளமாக வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடியாகும்.

அதனை பார்த்து அந்த ஊழியர் ஹேப்பியானார். மேலும் தான் பணியாற்றும் நிறுவனம் தான் சம்பளத்தை கூடுதலாக அனுப்பி வைத்ததை உறுதிப்படுத்தினார். மேலும் சம்பளம் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதை நிறுவனமும் கண்டுபிடித்தது. உடனடியாக அந்த ஊழியரை தொடர்பு கொண்டு கூடுதல் சம்பளத்தை திரும்ப வழங்கும்படி கேட்டது. அதற்கு ஊழியர் ‛ஓகே' என்று கூறினார்.

ஆனால் சொன்னதுபோல் அவர் அந்த சம்பளத்தை திருப்பி கொடுக்கவில்லை. மாறாக சம்பவம் நடந்த 3 நாட்களில் அவர் பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் சாண்டியகோ நகரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நிறுவனத்தின் பணத்தை திருடியதாக உதவியாளர் மீது குற்றம்சாட்டி இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நிறுவனம் சார்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அந்த நபருக்கு 540 நாள் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும். இதனால் பணியை ராஜினாமா செய்த உதவியாளர் திக்திக் மனநிலையில் இருந்தார். இந்நிலையில் தான் தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதாவது நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட நபர் பணத்தை திருடவில்லை. நிறுவனத்தில் இருந்து அங்கீகரிக்கப்படாத வகையில் பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை குற்ற வழக்காக கருதி விசாரிக்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனால் நிறுவனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாறாக வங்கி கணக்கில் கூடுதலாக விழுந்த பணத்தை தொடர்ந்து அந்த நபரே வைத்து கொள்ள மறைமுகமாக அனுமதி கிடைத்துள்ளது. இந்நிலையில் தான் வழக்கில் பின்னடைவை சந்தித்த நிறுவனம், ‛‛சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பணத்தை திரும்ப பெற தேவையான அனைத்து சட்ட வழிகளையும் தொடர்ந்து மேற்கொள்வோம். இந்த நீதிமன்றத்தின் உத்தரவை மறுபரிசீலனை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்'' என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+