சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து.. 14 பேர் பலி : 40 பேர் படுகாயம்
சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
பெய்ஜிங்: சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டதில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவில் கன்சு நெடுஞ்சாலையில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

கன்சு நெடுஞ்சாலை மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலை ஆகும். இங்கு ஒரு நாளைக்கு பல்லாயிரம் வாகனங்கள் வேகமாக செல்வது வழக்கம். விபத்துகள் நடப்பது அரிதிலும் அரிது.
இந்த நிலையில் அங்கு வேகமாக சென்ற டிரக் ஒன்று நிலைதடுமாறி சாலை தடுப்பு மீது மோதியுள்ளது. அதையடுத்து பின் வந்த வாகனங்கள் எல்லாம் அந்த டிரக் மீது மோதியுள்ளது.
[தீபாவளியன்று வங்ககடலில் காற்றழுத்த தாழ்வுநிலை.. கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம்]
வரிசையாக கார்கள், லாரிகள் அடுத்தடுத்து மோதியுள்ளது. வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 14 பேர் பலியாகி உள்ளனர். அங்கு மீட்பு பணி துரிதமாக நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளார். இவர்கள் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications