For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் ‘கூரை’யில் சூரியமின் நிலையம் அமைத்துள்ள சீனா

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: தனது ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் பகுதியில் உலகின் மிகப்பெரிய சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது சீனா. இப்பகுதி இந்திய எல்லைக்கு அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் செயல்பாட்டிற்கு வரவுள்ள இந்த சூரியசக்தி மின்நிலையம் மூலம் சீனா, அடுத்த 25 வருடங்களுக்கு தினந்தோறும் 10 மெஹாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலுமாம்.

உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள சூரிய மின்நிலையம் என்ற பெருமையை சீனாவின் இந்த மின்நிலையம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் கூரையில்...

உலகின் கூரையில்...

உலகின் கூரை என வர்ணிக்கப் படும் திபெத் தற்போது சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்பகுதி வருடத்தில் 3000 மணி நேரத்திற்கு அதிகமாக சூரிய ஒளி சக்தியை பெற்றுக்கொண்டிருக்கும் சிறப்பைப் பெற்றது.

உயரமான இடம்...

உயரமான இடம்...

இந்நிலையில், இந்தியா எல்லையோரம் அமைந்துள்ள உலகிலேயே மிக உயரமான ந்கரி என்ற இடத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் தனது சூரியசக்தி மின்நிலையத்தை அமைக்கும் பணியை ஆரம்பித்தது சீனா.

அடுத்த 25 ஆண்டுகளுக்கு...

அடுத்த 25 ஆண்டுகளுக்கு...

கடல் மட்டத்திலிருந்து 4,270 மீட்டர் உயரத்தில் 24 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் இந்த மின் திட்டத்தின் மூலம் அடுத்து வரும் 25 ஆண்டுகளுக்கு தினமும் 10 மெஹா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

காஷ்மீர் எல்லையில்...

காஷ்மீர் எல்லையில்...

கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ள இந்த மிகப்பெரிய பி.வி. மின்சார உற்பத்தி நிலையம் ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை கட்டுப்பாட்டு கோட்டு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
China has completed the construction of the world's highest photovoltaic power station in Tibet, close to the Indian border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X