திடீரென 300 அணைகளை இடித்து தள்ளிய சீனா! "கடைசி ராட்சசன்" வருதுன்னா சும்மாவா! உற்று பார்க்கும் மக்கள்
பெய்ஜிங்: சீனா திடீர் திடீரென எதாவது ஒரு நடவடிக்கையை எடுக்கும். அது சர்வாதிகார நாடு என்பதால் யாரும் பெரிதாகக் கேள்வி எழுப்ப மாட்டார்கள். இதற்கிடையே சீனா திடீரென அங்கு ஒரு அணையில் இருந்த 300 அணைகளை இடித்துத் தள்ளியுள்ளது. மேலும், 340+ புனல் மின்நிலையச் செயல்பாடுகளையும் நிறுத்தியுள்ளன. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.
சீனா ஒரு சர்வாதிகார நாடாக இருப்பதால் அங்குள்ள அரசு விரும்பியதைச் செய்யும். யாராவது எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட நிலைப்பாட்டை மாற்றாது. அவ்வளவு ஏன் அந்த எதிர்ப்பு குறித்த தகவல் வெளியே கூட வராது. அந்தளவுக்குச் சீனாவில் எல்லாமே அரசின் கட்டுப்பாட்டிலேயே நடக்கும். இதனால் அங்கு நடக்கும் பல விஷயங்கள் நமக்கு அதிர்ச்சி தருவதாகவே இருக்கும். அப்படியொரு சம்பவத்தை தான் சீனா இப்போது மீண்டும் செய்துள்ளது.

300 அணைகள் இடிப்பு
சீனாவில் ஓடும் யாங்சே நதியின் முக்கிய துணை நதி தான் சிஷுய் ஹீ.. சீனாவின் யுனான், குய்ஷோ மற்றும் சிச்சுவான் மாகாணங்கள் வழியாக 400 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சிஷுய் ஹீ நதியில் பாய்கிறது. இங்குள்ள மக்கள் பயன்படும் வகையில் சீனா இந்த நதி பாயும் வழியில் ஏகப்பட்ட அணைகளைக் கட்டி இரந்தது. இந்த 300 அணைகளையும் திடீரெனச் சீனா இடித்துத் தள்ளியுள்ளது. சிஷுய் ஹீ நதியைச் சிவப்பு நதி என்றும் சொல்வார்கள். இங்குள்ள மீன் இனங்கள் மற்றும் நதியின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக இந்த 300 அணைகளைச் சீனா இடித்துத் தள்ளியுள்ளது.
புனல் மின் நிலையங்கள்
மேலும் இந்த நதியில் உள்ள சிறிய நீர்மின் நிலையங்களின் செயல்பாட்டையும் நிறுத்தியுள்ளது. இந்த நதியில் மொத்தம் 357 அணைகள் இருந்த நிலையில், அதில் 300 அணைகள் அகற்றப்பட்டன. 373 சிறிய நீர்மின் நிலையங்களில் 342 நிலையங்களின் செயல்பாடுகள் நிறுத்திவிட்டன.
சிவப்பு நதி என்று அழைக்கப்படும் இந்த ஆறு, யாங்சே நதியின் மேல் பகுதியில் உள்ள அரிய வகை மீன்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக, அணைகள் மற்றும் மின் நிலையங்கள் மீன்களின் இடம்பெயர்வைத் தடுத்து, நீர் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தியது. இதனால் அங்கு வாழும் அரிய வகை மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டது. இதனால் பல மீன் இனங்கள் அழியும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.
காரணம் என்ன
இது குறித்து சிங்குவா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோவ் ஜியான்ஜுன் கூறுகையில், "மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட பிறகு நீர்ப் பாயும் முறை மாறியுள்ளது. சுற்றுச்சூழல் தேவைகளைப் பூர்த்தி செய்வதே முக்கியம். அதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார். இந்த நதியை மீட்டெடுக்கும் திட்டம் 2020இல் தொடங்கியது. அணைகளை நீக்கும் பணி ஆரம்பித்து, புனல் மின்சார உற்பத்தியை நிறுத்திய உடனேயே யாங்சே ஸ்டர்ஜன் போன்ற அரிய வகை மீன்கள் திரும்ப வரத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
கடைசி ராட்சசன்
இதில் "கடைசி ராட்சசன்" என்று அழைக்கப்படும் யாங்சே ஸ்டர்ஜன் வகை மீன் 2022ல் இயற்கைச் சூழலில் மொத்தமாகவே அழிந்துவிட்டதாகச் சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்ம் அறிவித்தது. அதாவது "கடைசி ராட்சசன்" அருங்காட்சியகங்களில் மட்டுமே இருப்பதாகவும் இயற்கையாக நதியில் மொத்தமாக அழிந்துவிட்டதாகவும் கூறினார்கள். நதியை மீட்டெடுக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்து 2023 மற்றும் 2024ல் இந்தக் கடைசி ராட்சசன் மீனைச் சிவப்பு நதியில் விட்டுள்ளனர். ஒரே ஆண்டில் அதன் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
அதிகரிக்கும் மீன்கள்
இது மட்டுமின்றி நதியில் பல்வேறு அரிய வகை மீன் இனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறதாம். இந்த சிஷுய் ஹீ நதி யாங்சே நதி என்ற நதியில் தான் போய்ச் சேர்கிறது. அந்த யாங்சே நதியின் சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்தச் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த நதியில் கடந்த 2010ல் தொடங்கி 10 ஆண்டுகள் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும், அந்த நதியிலும் இருக்கும் புனல் மின்நிலையங்கள் மூடப்பட்டு வருகிறது. மேலும், மணல் அள்ளவும் அங்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications